தோனி ஒரு 'பச்சைத்தமிழன்': பிரபல நடிகையின் மாமியார் கருத்து!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தல தோனிக்கு சிறுவர்கள், நடுத்தர வயதினர் மட்டுமின்றி வயது பேதமின்றி அனைத்து தரப்பினர்களும் ரசிகர்களாக உள்ளனர் என்பது பலமுறை நிரூபணம் ஆகியுள்ளது. அவரது அதிரடி பேட்டிங், அபார ஸ்டெம்பிங் திறமை, சூப்பர் கேப்டன்ஷிப், டென்ஷனான நேரத்திலும் கூலாக இருப்பது, மேட்ச் ஃபினிஷிங் என அவரை நேசிப்பதற்கான காரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம்
இந்த நிலையில் பிரபல நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு தனது சமூக வலைத்தள பக்கத்தில் தனது மாமியார் அதாவது இயக்குனர் சுந்தர் சியின் அம்மா, தோனியின் தீவிர ரசிகை என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 'சிஎஸ்கே அணியின் சூப்பர் ஹீரோ தோனி ஒரு 'பச்சைத்தமிழன்' என்றும் தனது 85 வயது மாமியார் பெருமையுடன் கூறியதாகவும் குஷ்பு குறிப்பிட்டுள்ளார். குஷ்புவின் இந்த டுவீட்டிற்கு நெட்டிசன்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
My mother in law, who is 85,hasn’t missed a single #CSK match, says #CSK super hero @msdhoni is a #patchaitamizhan”.. love it when you see so much of love for this man..
— Bhakts call me NAKHATKHAN-world calls me KHUSHBU (@khushsundar) May 2, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments