அடிச்சு தூக்கலாமா? அஜித் வசனத்தை டுவீட் போட்ட சிஎஸ்கே வீரர்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஐபிஎல் சீசன் ஆரம்பித்து விட்டாலே சிஎஸ்கே வீரர்கள் தமிழில் டுவீட் போட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவது தெரிந்ததே. குறிப்பாக ஹர்பஜன்சிங், இம்ரான் தாஹிர் ஆகிய இருவரின் டுவீட்டுக்கள் டுவிட்டரில் வைரலாகும்.
அந்த வகையில் ஏற்கனவே தமிழ் டுவீட்டுக்களை ஹர்பஜன்சிங் கடந்த சில நாட்களுக்கு முன் ஆரம்பித்துவிட்ட நிலையில் தற்போது இம்ரான் தாஹிரும் டுவிட் போட ஆரம்பித்துவிட்டார். அவர் தனது டுவீட்டில் 'என் இனிய உடன்பிறப்புகளே நலமா. உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலுடன் வரும் சகோதரன். அடிச்சு தூக்கலாமா? எடுடா வண்டிய போடுடா விசில்” என்று பதிவு செய்துள்ளார்.
இவர்தான் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின்போது ரஜினியின் 'காலா' படம் குறித்து, 'என் இனிய உடன் பிறப்புகளே, நலமா? இப்போதுதான் காலா பார்த்தேன். ஐபிஎல் எங்க கோட்டைடா, ஒரு பிடி மண்ணைக் கூட நீங்க அள்ள முடியாது. கோப்பையைத் தூக்கிடுவிங்களா? அடுத்த வருஷம் இந்த காலாவோட வீரத்தை இன்னும் பார்ப்பீங்க நீங்க. சென்னை சூப்பர் கிங்ஸ் வேங்கை மனிதர்கள் ஒத்தையில நிப்போம். எடுடா வண்டியை. போடுடா விசிலை' என்று டுவீட் போட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Yen iniya udan pirapugaley nalama ? Ungal anaivaraiyum sandikka avaludan varum ungal sagotharan.adichu thookalama @ChennaiIPL #eduda vandiya poduda whistle pic.twitter.com/HGpWVVreoD
— Imran Tahir (@ImranTahirSA) March 19, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com