சுரேஷ் ரெய்னாவை அடுத்து தீபக் சஹாரும் நாடு திரும்புகிறாரா? என்ன ஆச்சு சிஎஸ்கே அணிக்கு?

  • IndiaGlitz, [Saturday,August 29 2020]

2020ஆம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகள் இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்பட 8 அணி வீரர்களும் சமீபத்தில் துபாய் சென்றுள்ளனர். தனிமைப்படுத்துதல் காலம் முடிந்தவுடன் வீரர்கள் அனைவரும் பயிற்சியில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தியாக சுரேஷ் ரெய்னா போட்டியில் இருந்து விலகி விட்டதாகவும் அவர் இந்தியா திரும்பி விட்டதாகவும் செய்தி வெளிவந்தது. இதனை அடுத்து தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களில் ஒருவரான தீபக் சஹாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

ஏற்கனவே நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சாளர் ஒருவருக்கும், 12 உதவியாளர்களுக்கும் கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது முன்னணி ஊடகம் ஒன்று அந்த ஒரு வீரர் தீபக் சஹார் தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதனை உறுதி செய்யவில்லை.

ஒருவேளை இந்த செய்தி உண்மையாக இருந்தால் தீபக் சஹார் இந்தியா திருப்பி அனுப்பப்படுவார் அல்லது துபாயிலேயே கொரோனா நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்வார் என தெரிகிறது. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இரண்டு வீரர்கள் எதிர்பாராத காரணத்தினால் ஐபிஎல் போட்டியில் இருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு மேலும் ஒரு வாரம் தனிமைப்படுத்துதல் தொடரும் என்று செய்திகள் வெளிவந்துள்ளன

More News

17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: தாலி கட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் கைதான மாப்பிள்ளை

17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய இருந்த இளைஞர் ஒருவர், தாலி கட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

மனிதக்கடவுளுக்கே எங்கள் ஓட்டு: 'பிகில்' பாணியில் முதல்வருக்கு மாணவர்களின் முழுபக்க விளம்பரம்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் சமீபத்தில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாகவும்

நாடு திரும்புகிறார் முன்னணி சிஎஸ்கே வீரர்: ஐபிஎல் போட்டியில் இருந்து விலகியதாக தகவல்!

2020ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த போட்டியில் கலந்துகொள்ள இருக்கும்

தென்கொரிய விமான நிலையத்தில் திடீரெனச் சுருண்டு விழுந்து இறந்த இந்திய மாணவி- பரபரப்பு தகவல்!!!

தென்கொரியாவில் ஆராய்ச்சி மாணவியாக படித்துவரும் கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தென்கொரிய விமான நிலையத்தில் திடீரென சுருண்டு விழுந்து

உலகின் மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட செம்மறி ஆடு!!!

அரியவகை செம்மறி ஆடு ஒன்று இந்திய மதிப்பில் ரூ.3.5 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது