close
Choose your channels

விக்னேஷ் சிவனின் அடுத்த படத்தில் சிஎஸ்கே வீரரின் தங்கை!

Friday, October 29, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனின் அடுத்தப் படத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் ஒருவரின் தங்கை நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகிவரும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு சில திரைப்படங்களை தயாரித்து வருகிறது என்பதும் சமீபத்தில்கூட கவின் நடிக்கும் ’ஊர்குருவி’ என்ற படத்தின் அறிவிப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன், நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கும் இன்னொரு திரைப்படம் ‘வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம்’. இந்த படத்தில் சூரரைப்போற்று படத்தில் நடித்த கிருஷ்ணகுமார் ஹீரோவாகவும், பிரபல பாடகி ஜொனிதா காந்தி ஹீரோயினாகவும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அறிமுக இயக்குனர் விநாயக் என்பவர் இயக்கும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் மால்தி சாஹர் நடிக்க உள்ளார். இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் தீபக் சஹாரின் உடன்பிறந்த தங்கை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment