2 ரன் அவுட்டுக்கள், நூலிழையில் தவறிய கோப்பை: சிஎஸ்கே ரசிகர்கள் சோகம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் இறுதி போட்டியில் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள் மோதிய நிலையில் ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி கோப்பையை இழந்தது. தோனி, வாட்சன் ரன் அவுட் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
150 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சிஎஸ்கே அணி விளையாடியபோது முதல் ஓவரில் இருந்தே போட்டி சிஎஸ்கே அணியின் பக்கமே இருந்தது. 49 ஓவர்கள் முடிந்த பின்னர் வெற்றிக்கு 9 ரன்களே தேவை என்ற நிலையிலும் போட்டி சிஎஸ்கே பக்கமே இருந்தது. ஆனால் எதிர்பாராத வகையில் இரண்டாவது ரன் எடுக்கும் முயற்சியில் வாட்சன் ரன் அவுட் ஆனது, கடைசி இரண்டு பந்துகளையும் ஜடேஜா சந்திக்க முடியாமல் தாக்கூர் சந்திக்க நேர்ந்ததை மலிங்கா சரியாக பயன்படுத்தியதால் கடைசி நிமிடத்தில் போட்டி திடீரென மும்பை பக்கம் திரும்பி அந்த அணிக்கு வெற்றியை தந்தது.
தோல்வி குறித்து போட்டியின் முடிவுக்கு பின் கருத்து கூறிய தல தோனி, 'இரண்டு அணிகளுமே நிறைய தவறுகள் செய்தோம். ஆனால், குறைவாக தவறு செய்த அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த ஆட்டம் ஒரு நல்ல பைனல் ஆட்டம். கடைசிப் பந்து வரை ஆட்டம் சென்றது. இந்த சீசனில் பௌலர்கள் அணிக்காக நிறைய உழைத்துள்ளனர். இன்றைக்குக் கூட 150 ரன்களுக்கு மேல் செல்ல வேண்டிய போட்டியை பெளலர்கள் கட்டுப்படுத்தியுள்ளனர்.
தவறு எங்கு சென்றோம் என்று ஆராய்ந்து அடுத்த வருடம் அதனை சரி செய்ய வேண்டும். ஆனால் அதற்கு இப்போது நேரம் இல்லை உலகக்கோப்பைக்கு தயாராக வேண்டும். உலகக்கோப்பைக்கு பின் அடுத்த ஐபிஎல் போட்டிக்கு தயாராக வேண்டும். அடுத்த ஐபிஎல் போட்டியிலும் விளையாடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்று தோனி கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments