மாஸ் காட்டிய தோனி… சிஎஸ்கே ரசிகர்களை குளிர வைக்கும் இன்னொரு வரலாற்று சம்பவம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஐபிஎல் 2021 இறுதிப்போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. இதில் கேப்டன் தோனி தலைமையிலான சென்னை சிஎஸ்கே அணிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையிலான ஆட்டம் விறுவிறுப்பாக நடந்துமுடிந்தது. இந்தப் போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி சிஎஸ்கே அணியினர் வெற்றிக்கோப்பையை தட்டிச் சென்றுள்ளனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் தகுதிச் சுற்றுக்கே போகாத சிஎஸ்கே அணியினர் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் தத்தளிக்க வைத்துள்ளனர். இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் சென்னை சிஎஸ்கே அணிக்கும் இடையில், 9 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வை தற்போது ரசிகர்கள் நினைவுகூர்ந்து அதுகுறித்து தல தோனியை மெச்சி வருகின்றனர்.
அதாவது கடந்த 2012 ஆம் ஆண்டு சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சிஎஸ்கே அணிக்கும் கொல்கத்தா அணிக்கும் இடையில் நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் முதலில் ஆடிய சிஎஸ்கே 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்களை குவித்திருந்தனர். ஆனால் சிஎஸ்கேவை எதிர்த்த கொல்கத்தா அணி 19.4 ஓவரில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்களை எடுத்து சிஎஸ்கேவை ஓரம்கட்டியது.
தற்போது அந்த நிகழ்விற்கு பழி தீர்த்துக் கொண்ட சிஎஸ்கே அணி வீரர்கள் 193 என்ற இலக்கை நிர்ணயித்ததோடு 27 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியுள்ளனர். அதிலும் 91 ரன்கள் வரையிலும் முதல் விக்கெட்டை இழக்காத கொல்கத்தா பின்பு 125 ரன்களை எடுத்திருந்த நிலையில் 8 விக்கெட்டை இழந்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதனால் கேப்டன் தோனியின் திறமையைக் கண்டு சிஎஸ்கே ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments