சிஎஸ்கே போட்டியை பார்க்க புனேவுக்கு சென்ற சென்னை ரசிகர்கள்

  • IndiaGlitz, [Thursday,April 19 2018]

கடந்த 10ஆம் தேதி சென்னையில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி நடந்தபோது ஒருசில அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலகை சேர்ந்த சிலரும் நடத்திய போராட்டம் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து சென்னையில் நடத்த திட்டமிட்டிருந்த அனைத்து போட்டிகளையும் புனேவுக்கு மாற்றியது ஐபிஎல் நிர்வாகம். இந்த நிலையில் நாளை ஏப்ரல் 20ஆம் தேதி சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டி புனேவில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டியை நேரில் பார்க்க திட்டமிட்ட சென்னை அணி ரசிகர்கள் மன்றம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன் இணைந்து ரயில்வே நிர்வாகத்திடம் பேசி சிறப்பு ரயில் ஒன்றை ஏற்பாடு செய்தனர். இந்த ரயில் சுமார் 1000 சிஎஸ்கே ரசிகர்களுடன் நேற்று சென்னையில் இருந்து கிளம்பியது. 

சிஎஸ்கே பனியனுடன் ரசிகர்கள் உற்சாகமாக புனேவை நோக்கி பயணம் செய்தனர். சுமார் 1000 கிமீ கடந்து சிஎஸ்கே போட்டியை பார்க்க செல்லும் இதுபோன்ற தீவிர ரசிகர்கள் இருக்கும் வரை ஐபிஎல் போட்டிக்கு எத்தனை எதிர்ப்புகள் இருந்தாலும் அதற்கு இருக்கும் மதிப்பு குறையாது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தல அஜித்தின் சாதனையை முறியடித்த சூப்பர் ஸ்டார் ரஜினி

'காலா' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்ற செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தல அஜித்தின் விவேகம் சாதனையை ரஜினியின் 'காலா' திரைப்படம் முறியடித்துள்ளது.

ரஜினியின் 'காலா' ரிலீஸ் எப்போது? விஷால் தகவல்

நேற்று நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு பின் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது .

50 வருட திரைஉலக வாழ்கையை புரட்டி போட்ட விஷால் 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சாதனைகளை திரையுலகம் கொண்டாடுகிறது, இந்திய திரையுலகம் கோலிவுட்டை வியந்து பார்க்கிறது. 

மீண்டும் சர்ச்சையை கிளப்பிய எச்.ராஜாவின் டுவீட்

எச்.ராஜா, சமீபத்தில் பெரியார் குறித்து பதிவு செய்த டுவீட் சர்ச்சையை கிளப்பிய நிலையில் அந்த டுவீட்டுக்கு கிளம்பிய எதிர்ப்பை பார்த்து அந்த டுவீட் அவருடைய அட்மினால் போடப்பட்டது என்று சமாளித்தார்

ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா?

கோலிவுட் திரையுலகில் ஒவ்வொரு வாரமும் மூன்று முதல் ஐந்து படங்கள் வரை சராசரியாக ரிலீசாகி கொண்டிருந்த நிலையில் கடந்த 45 நாட்களுக்கும் மேலாக புதிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை.