பஞ்சாப் அணி வீரரின் காலைத் தொட்டு வணங்கிய சிஎஸ்கே வீரர்… வைரல் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பெரியவர்களின் காலை தொட்டு வணங்கும் பழக்கம் இந்தியச் சமூகத்தில் பழங்காலம் தொட்டே இருந்து வருகிறது. இந்தப் பழக்கத்தைக் குறித்து அவ்வபோது சில விமர்சனம் வைக்கப்பட்டாலும் தொடர்ந்து மூத்தவர்களைக் கவுரவிக்கும் பொருட்டு இந்தப் பழக்கம் பெரும்பாலான துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் சங்கீதம், பரதநாட்டியம் போன்ற துறைகளில் இன்றும் முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கிரிக்கெட்டிலும் இந்தப் பழக்கத்தை சில இளம் வீரர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். அதிலும் நேற்றைய ஐபிஎல் போட்டியை ஒட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரும் இளம் வீரருமான தீபக் சாஹர் பஞ்சாப் கிங்ஸ் அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமியின் காலைத் தொட்டு வணங்கிய காட்சி பலரையும் மெய்ச்சிலிர்க்க வைத்து இருக்கிறது.
மேலும் இப்படி காலைத் தொட்டு வணங்கிய தீபக் சாஹர் தொடர்ந்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது மேலும் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான மயங்க் அகர்வால், கிறிஸ் கெயில், தீபக் ஹோடா, நிக்கோலஸ் பூரான் போன்றோரின் விக்கெட்டுகளை நேற்று தீபக் சாஹர் மிக எளிதாக வீழ்த்தினார். இதனால் நேற்றைய ஆட்டநாயகனாகவும் தீபக் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் முகமது ஷமியின் காலைத் தொட்டு வணங்கிய தீபக் சாஹரின் புகைப்படம் தற்போது இணையத்தில் கவனம் பெற்று இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments