சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ் சம்பளம் எவ்வளவு தெரியுமா? சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
- IndiaGlitz, [Wednesday,April 10 2024] Sports News
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருத்ராஜ் கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது சம்பளம் மற்றும் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆரம்பித்த காலத்தில் இருந்து தல தோனி கேப்டனாக இருந்து வருகிறார் என்பதும் ஐபிஎல் அணிகளில் கேப்டனை மாற்றாமல் இருந்த ஒரே அணி சிஎஸ்கே அணி என்ற பெருமையை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தோனி அடுத்த ஆண்டு ஓய்வு பெற்று ஐபிஎல் தொடரில் இருந்து விலகி விடுவார் என்று கூறப்படும் நிலையில் இந்த ஆண்டு அவர் புதிய கேப்டனை தான் கூடவே இருந்து பயிற்சி கொடுக்க வேண்டும் என்பதற்காக ருத்ராஜை கேப்டன் ஆக நியமனம் செய்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து ருத்ராஜ் கேப்டன் பதவியை ஏற்று தோனியின் வழிகாட்டலில் அணியை வழி நடத்தி வருகிறார்.
ருத்ராஜ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ஆகி உள்ள நிலையில் அவருக்கு சம்பளமாக மட்டும் சிஎஸ்கே அணி ஆறு கோடி ரூபாய் தந்து கொண்டிருப்பதாக தெரிகிறது. அது மட்டும் இன்றி ஒவ்வொரு போட்டியிலும் கலந்து கொள்ள தரப்படும் பணம் உள்பட பல்வேறு வருமானம் அவருக்கு வருகிறது.
மேலும் இந்திய அணியிலும் அவர் அவ்வப்போது விளையாடி நிலையில் அவருக்கு கிட்டத்தட்ட சம்பளமாக எட்டு கோடி பிசிசிஐ வழங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனை மேலும் சில விளம்பர நிறுவனங்களில் அம்பாசிடராக ருத்ராஜ் இருப்பதை அடுத்து அதிலும் அவருக்கு வருமானம் வருகிறது.
இந்த நிலையில் தற்போதைய அவருடைய மொத்த சொத்து மதிப்பு 36 கோடி ரூபாய் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவரிடம் விலைமதிப்புள்ள ஆடி மற்றும் பிஎம்டபிள்யூ கார் வகைகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான ருத்ராஜ் முதல் மூன்று போட்டிகளில் 0,5,0, ரன்கள் மட்டுமே எடுத்தார். இருப்பினும் அவர் மீது தோனி வைத்த நம்பிக்கையை அடுத்து, அதன் பின்னர் அவர் அதிரடியாக விளையாடினார் என்பதும் 2023 ஆம் ஆண்டு தொடரில் அதிகபட்சமாக 590 ரன்கள் எடுத்து சாதனை செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது