இளம் வீரர்களுக்கு ஸ்பார்க் இல்லையா? தோனிக்கு குவியும் கண்டனம்

இளம் வீரர்களுக்கு ஸ்பார்க் இல்லை என தோனி கூறியதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் சிஎஸ்கே ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி படுதோல்வி அடைந்தது. இந்த ஐபிஎல் தொடரில் முதலில் பேட்டிங் செய்து மிகக்குறைந்த ரன்கள் எடுத்து அணி என்ற மோசமான சாதனையை நேற்று சிஎஸ்கே பதிவு செய்தது. 20 ஓவர்களில் வெறும் 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. குறிப்பாக 4 விக்கெட் விழுந்த பிறகு தோனி மற்றும் ஜடேஜா கடைசிவரை ஆமை வேகத்தில் விளையாடினார்கள் என்பதும் கடைசி ஓவரில் களமிறங்கிய கேதார் ஜாதவ் வழக்கம்போல் சொதப்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தோனியின் அணி தேர்வை சிஎஸ்கே ரசிகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். கெய்க்வாட், ஜெகதீசன். சான்ட்னர் போன்ற இளம் வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க காத்திருக்கும் நிலையில் மோசமாக ஃபெர்பாம் செய்யும் பியூஸ் சாவ்லா, கேதார் ஜாதவ் ஆகியோர்களுக்கு தொடர்ந்து தோனி வாய்ப்பு தந்து கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளனர். நேற்று களமிறக்கப்பட்ட ஹாசில்வுட் பவுலிங்கில் பட்டையை கிளப்பியதுபோல் மற்ற இளைஞர்களுக்கும் வாய்ப்பு தர வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

இதுகுறித்து நேற்று தோனி கூறிய போது ’இளம் வீரர்களுக்கு ஸ்பார்க் இல்லை அதனால்தான் அனுபவமுள்ள வீரர்களை தேர்வு செய்ததாக கூறினார். இதற்கு தோனியின் ரசிகர்களே கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் அவர்கள் கூறியபோது ’ஜெகதீசனிடம் இடமில்லாத ஸ்பார்க்கையா கேதார் ஜாதவ், பியூஸ் சாவ்லா ஆகியோர்களிடம் தோனி பார்த்துவிட்டார். இளம் வீரர்களுக்கு ஸ்பார்க் இல்லை என்று தோனி சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

More News

அரக்கனாக மாறிய சுரேஷ்: போட்டியாளர்களின் பாடு திண்டாட்டம்தான்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு டாஸ்குகள் வைப்பதே அவர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்துவதும் சண்டை செய்ய வைப்பதும் தான் என்பது தெரிந்ததே

திரையுலகில் அடுத்த அவதாரம் எடுத்த நமீதா! அதிகாரபூர்வ அறிவிப்பு

தமிழ் திரையுலகில் சமீபத்தில் நடிகை வரலட்சுமி இயக்குனர் அவதாரம் எடுத்தார் என்பதும் ஒட்டுமொத்த திரையுலகமும் அவருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவித்தது என்பதும் தெரிந்ததே 

3 வயதில் உலகச் சாதனை படைத்த ஈரோட்டு சிறுமி… குவியும் பாராட்டுகள்!!!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 3 வயது சிறுமி தனது அபார நினைவாற்றல் திறன் காரணமாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளார்.

மாட்டுச்சாணம் கதிர்வீச்சை கட்டுப்படுத்துமா??? வகை தொகையாக கேள்வி எழுப்பும் 600 விஞ்ஞானிகள்!!!

செல்போனில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சைத் தடுக்கும் வகையில் மாட்டுச் சாணத்தை கொண்டு  புதிய “சிப்” உருவாக்கப் பட்டுள்ளதாக ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் தலைவர் கூறியிருக்கிறார்

கொரோனாவுக்கு ஏற்ற சிகிச்சை முறை… இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 14 வயது சிறுமி அசத்தல்!!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வரும் இந்திய வம்சாவாளியைச் சேர்ந்த அமெரிக்க வாழ் சிறுமிக்கு இளம் விஞ்ஞானிகள் விருது வழங்கி கவுரவிக்கப் பட்டுள்ளது.