சிஎஸ்கே அணிக்கு விக்னேஷ் சிவன் செய்த உதவி

  • IndiaGlitz, [Monday,April 02 2018]

இரண்டு ஆண்டுகள் தடைக்கு பின்னர் தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு மீண்டும் களமிறங்கவுள்ள நிலையில் இந்த அணிக்கு தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் சிஎஸ்கே 2.0 என்ற மியூசிக் வீடியோ தற்போது வெளிவந்துள்ளது.

சிஎஸ்கே ஆன்ந்தம் என்று கூறப்படும் இந்த வீடியோவை பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் நேற்று வெளியிட்டார். சிஎஸ்கே என்பது ஒரு டீம் அல்ல, அது ஒரு எமோஷன் என்ற பஞ்ச் டயலாக்குடன் தொடங்கும் இந்த பாடலை நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன் பாடியுள்ளார்.

பிஜித் ராமசாமி இயக்கிய இந்த பாடலை ஏக், ஜிவி ஆகியோர் இயற்றியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணணயதளங்களில் வைரலாகி வருகிறது.