”போய் வேற வேல இருந்தா பாருங்கடா”: பிரபல இயக்குனரின் அடுத்த பட டைட்டிலா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்திய குறித்து செய்தி வெளியிட்ட ஆங்கில ஊடகம் ஒன்று விஜய் மற்றும் விஜய்சேதுபதி உள்பட பல நடிகர்கள் மதமாற்றத்திற்கு மறைமுகமாக உதவி செய்ததாகவும், அதுமட்டுமின்றி பல கோடி ரூபாய் கருப்புப் பணம் இதில் புழங்கி வருவதாகவும் பல திரையுலகைச் சேர்ந்தவர்களை மதமாற்றத்தில் ஈடுபடும் வைக்க இவர்கள் முயற்சித்து வருவதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியை பார்த்து கடுப்பான மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நேற்று தனது டுவிட்டரில் ”போய் வேற வேலை இருந்தா பாருங்கடா” என்று கடுப்புடன் பதிவு செய்த ஒரு டுவீட் மிகப்பெரிய அளவில் வைரலாகியது.
இந்த நிலையில் நடிகர் மிர்ச்சி சிவா நடிப்பில் ’தமிழ்ப்படம்’ மற்றும் ’தமிழ்ப்படம் 2’ ஆகிய இரண்டு படங்களை இயக்கிய இயக்குனர் சி.எஸ்.அமுதன் அவர்கள் பிரபல தயாரிப்பாளர் ஒய்நாட் ஸ்டுடியோ சசிகாந்திடம் ‘போய் வேற வேலை பாருங்கடா’ என்ற டைட்டிலை உடனடியாக பதிவு செய்யுங்கள் என்று கூறியுள்ளார். அனேகமாக இவர் இயக்கும் அடுத்த படத்திற்கு இதுதான் டைட்டிலாக இருக்கும் என்றும் மிர்ச்சி சிவா தான் அந்தப் படத்தின் ஹீரோவாக நடிப்பார் என்றும் ரசிகர்கள் கமெண்ட் அளித்து வருகின்றனர்.
Dear @sash041075 pls register the title “போய் வேற வேல இருந்தா பாருங்கடா” immediately.
— CS Amudhan (@csamudhan) February 12, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com