”போய் வேற வேல இருந்தா பாருங்கடா”: பிரபல இயக்குனரின் அடுத்த பட டைட்டிலா?

தளபதி விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்திய குறித்து செய்தி வெளியிட்ட ஆங்கில ஊடகம் ஒன்று விஜய் மற்றும் விஜய்சேதுபதி உள்பட பல நடிகர்கள் மதமாற்றத்திற்கு மறைமுகமாக உதவி செய்ததாகவும், அதுமட்டுமின்றி பல கோடி ரூபாய் கருப்புப் பணம் இதில் புழங்கி வருவதாகவும் பல திரையுலகைச் சேர்ந்தவர்களை மதமாற்றத்தில் ஈடுபடும் வைக்க இவர்கள் முயற்சித்து வருவதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த செய்தியை பார்த்து கடுப்பான மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நேற்று தனது டுவிட்டரில் ”போய் வேற வேலை இருந்தா பாருங்கடா” என்று கடுப்புடன் பதிவு செய்த ஒரு டுவீட் மிகப்பெரிய அளவில் வைரலாகியது.

இந்த நிலையில் நடிகர் மிர்ச்சி சிவா நடிப்பில் ’தமிழ்ப்படம்’ மற்றும் ’தமிழ்ப்படம் 2’ ஆகிய இரண்டு படங்களை இயக்கிய இயக்குனர் சி.எஸ்.அமுதன் அவர்கள் பிரபல தயாரிப்பாளர் ஒய்நாட் ஸ்டுடியோ சசிகாந்திடம் ‘போய் வேற வேலை பாருங்கடா’ என்ற டைட்டிலை உடனடியாக பதிவு செய்யுங்கள் என்று கூறியுள்ளார். அனேகமாக இவர் இயக்கும் அடுத்த படத்திற்கு இதுதான் டைட்டிலாக இருக்கும் என்றும் மிர்ச்சி சிவா தான் அந்தப் படத்தின் ஹீரோவாக நடிப்பார் என்றும் ரசிகர்கள் கமெண்ட் அளித்து வருகின்றனர்.
 

More News

'96' ராம், ஜானு செய்ய போகும் மிகப்பெரிய சாதனை!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், தொலைக்காட்சியில் வருவதற்கு முன் வானொலிகளில் ஒலிச்சித்திரம் என்ற ஒன்று ஒளிபரப்பாகும் என்பது 80களின் சினிமா ரசிகர்களுக்கு மட்டுமே தெரியும்.

ஜாக்பாட்.. சதுரங்க வேட்டை பட கதைகளை கலந்து, ரூ.2 கோடிக்கு அட்சய பாத்திரம் விற்ற மோசடி கும்பல்..!

தன் வீட்டுக்கு ரகசியமாகக் கொண்டுவந்து வைத்து பூஜை செய்து சில நாள்கள் கழித்து திறந்துபார்த்தார். நகைகள் இருக்கும் புதையலை அந்தப் பெட்டி காட்டவில்லை.

அசாத்திய அரசியல் வெற்றி; யார் இந்த பிரசாந்த் கிஷோர்? தமிழகத்தில் இவரது வியூகம் பலிக்குமா?

இந்தியாவில் ஐபேக் நிறுவனத்தின் அரசியல் வியூகங்கள் மிகவும் பிரபலம். இந்த நிறுவனம் யார் பின்னால் நிற்கிறதோ அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள் என்று பெரும்பாலும் நம்பப் படுகிறது.

ஹெல்மெட்டுக்குள் சுருண்டு கிடந்த பாம்பு..தலையில் சுமந்தபடி 11 கி.மீ பயணித்த ஆசிரியர்..!

பாம்பைத் தலையில் சுமந்தபடி பயணித்ததால் பயமடைந்த அவர் உடனடியாக நண்பரின் உதவியுடன் தாலுகா மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு அவருக்கு ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட சோதனைகள் செய்யப்பட்டன.

உலக அதிசயத்தில் ஒன்றாக இடம் பெற போகிறது தஞ்சை பெரிய கோவில்..! ஒருங்கிணைப்புக்குழு முழு முயற்சி.

பெரிய கோயிலை உலக அதிசயங்களின் பட்டியலில் சேர்ப்பதற்காக சமூக ஆர்வலர்கள் இணைந்து குழு ஒன்றை உருவாக்கியுள்ளனர்.