ஹவுரா பிரிட்ஜில் படப்பிடிப்பை முடித்த சி.எஸ்.அமுதன்: அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
’தமிழ் படம்’, ’தமிழ் படம் 2’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சி.எஸ்.அமுதன் தற்போது விஜய் ஆண்டனி நடித்து வரும் ’ரத்தம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்தோம் .
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் உள்ள ஹவுரா பிரிட்ஜில் கடந்த சில நாட்களாக நடைபெற்றது. இதனை அடுத்து தற்போது தனது சமூக வலைத்தளத்தில் கொல்கத்தாவில் தற்போது முடிந்ததாகவும், அடுத்த கட்ட படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் என்றும் இயக்குனர் சி.எஸ்.அமுதன் தெரிவித்டுள்ளார்.
மேலும் இதுகுறித்த புகைப்படங்களை இயக்குனர் சி.எஸ்.அமுதன் பதிவு செய்த நிலையில், அதில் விஜய் ஆண்டனியின் புகைப்படம் மட்டும் இல்லை. இது குறித்து அவர் கூறியபோது விஜய் ஆண்டனிக்கு இந்த படத்தில் வித்தியாசமான கெட்டப் என்றும் அந்த கெட்டப் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக அவரது புகைப்படத்தை மட்டும் பதிவு செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
விஜய் ஆண்டனியுடன் ரம்யா நம்பீசன், நந்திதா ஸ்வேதா மற்றும் மகிமா நம்பியார் உள்பட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
And we’ve wrapped the last day of shoot for @vijayantony on the spectacular Howrah bridge in Kolkota. Nandri Nanba!
— CS Amudhan (@csamudhan) March 26, 2022
Not including his pic to avoid prematurely revealing his look.
We are nearing the end of shoot for #Ratham . Only Spain remains. @FvInfiniti pic.twitter.com/bSGbA2QRao
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments