'லியோ' குறித்து இயக்குனர் சிஎஸ் அமுதனின் விமர்சனம்..
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் இந்த படம் 500 கோடி ரூபாய் என்ற மைல்கல்லை தொட்டுவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. இருப்பினும் இந்த படத்திற்கு ஒரு சிலர் கலவையான விமர்சனம் தந்து கொண்டிருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’தமிழ்ப்படம்’, ’தமிழ்ப்படம் 2’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சிஎஸ் அமுதன் சமீபத்தில் வெளியான ’ரத்தம்’ என்ற படத்தையும் இயக்கி இருந்தார்,. இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த நிலையில் அவர் தனது சமூக வலைதளத்தில் ’லியோ’ படம் குறித்து கருத்து கூறுகையில் ’லியோ’ஒரு fun' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். ’ரத்தம்’ ’ரத்தம்’ விட ’லியோ’ படம் நன்றாக தான் இருக்கிறது என்றும் நீங்கள் எடுத்த இயக்கிய ரத்தம் படம் தான் fun என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.
இதுபோல் பிரபல தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு சமீபத்தில் அளித்த பேட்டியில் ’லியோ’ சர்ச்சையை படைப்பாளிகளின் சுதந்திரமாக பார்க்கிறேன் என்று தெரிவித்தார். மேலும் ’ஜப்பான்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா அக்டோபர் 28ஆம் தேதி நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற உள்ளதாகவும் குடும்பத்துடன் வந்து பார்க்கும் படமாக ’ஜப்பான்’ படம் இருக்கும் என்றும் முகம் சுளிக்க வைக்கும் சண்டை காட்சிகள் வசனங்கள் படத்தில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
Leo was fun.
— CS Amudhan (@csamudhan) October 24, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout