'லியோ' குறித்து இயக்குனர் சிஎஸ் அமுதனின் விமர்சனம்..

  • IndiaGlitz, [Wednesday,October 25 2023]

தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் இந்த படம் 500 கோடி ரூபாய் என்ற மைல்கல்லை தொட்டுவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. இருப்பினும் இந்த படத்திற்கு ஒரு சிலர் கலவையான விமர்சனம் தந்து கொண்டிருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’தமிழ்ப்படம்’, ’தமிழ்ப்படம் 2’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சிஎஸ் அமுதன் சமீபத்தில் வெளியான ’ரத்தம்’ என்ற படத்தையும் இயக்கி இருந்தார்,. இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த நிலையில் அவர் தனது சமூக வலைதளத்தில் ’லியோ’ படம் குறித்து கருத்து கூறுகையில் ’லியோ’ஒரு fun' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். ’ரத்தம்’ ’ரத்தம்’ விட ’லியோ’ படம் நன்றாக தான் இருக்கிறது என்றும் நீங்கள் எடுத்த இயக்கிய ரத்தம் படம் தான் fun என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.

இதுபோல் பிரபல தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு சமீபத்தில் அளித்த பேட்டியில் ’லியோ’ சர்ச்சையை படைப்பாளிகளின் சுதந்திரமாக பார்க்கிறேன் என்று தெரிவித்தார். மேலும் ’ஜப்பான்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா அக்டோபர் 28ஆம் தேதி நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற உள்ளதாகவும் குடும்பத்துடன் வந்து பார்க்கும் படமாக ’ஜப்பான்’ படம் இருக்கும் என்றும் முகம் சுளிக்க வைக்கும் சண்டை காட்சிகள் வசனங்கள் படத்தில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

More News

33 வருடங்களுக்கு பின் என் இதயம் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறது: ரஜினியின் நெகிழ்ச்சியான பதிவு..!

33 வருடங்களுக்கு பின் என் இதயம் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறது: ரஜினியின் நெகிழ்ச்சியான பதிவு..!

2 கதை சொன்னேன், ரெண்டும் விஜய்க்கு பிடிக்கல, ஆனால்.. பிரபல இயக்குனரின் ஆச்சரிய தகவல்..!

2 கதை சொன்னேன், ரெண்டும் விஜய்க்கு பிடிக்கல, ஆனால்.. பிரபல இயக்குனரின் ஆச்சரிய தகவல்..!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75வது படம்.. டைட்டிலுடன் கூடிய மாஸ் வீடியோ..!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் 75 ஆவது படம் கடந்த ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.

நான் எதுவுமே பாக்கலைங்க... விஷ்ணு பாத்ரூம் மேட்டர் குறித்து வெட்கத்துடன் பூர்ணிமா..

தான் பாத்ரூமில் குளிக்கும் போது திடீரென பூர்ணிமா கதவை திறந்ததாக விஷ்ணு குற்றச்சாட்டு கூற, அதற்கு 'நான் எதுவுமே பாக்கலைங்க' என்று பூர்ணிமா கூறும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி

'நாங்க சட்டத்திற்கு கட்டுப்பட மாட்டோம்.. பேஸ்மெண்ட் டீம்': துருவ நட்சத்திரம் டிரைலர்..!

சியான் விக்ரம் நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான 'துருவ நட்சத்திரம்' என்ற திரைப்படம் நவம்பர் 24ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரலாகி