தற்காப்பு முக்கியம் அல்ல; தன்மானம்தான் முக்கியம்: முரசொலி பவளவிழாவில் கமல்

  • IndiaGlitz, [Friday,August 11 2017]

நேற்று நடைபெற்ற முரசொலி பவள விழாவில் உலக நாயகன் கமல்ஹாசன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் உள்பட பல விஐபிக்கள் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர். கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவருக்கும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசு வழங்கி கெளரவித்தார். இந்த விழாவில் கமல் பேசியதாவது:

நான் முதன்முதலில் சிவாஜியிடம் தான் தமிழ் கற்றேன். பின்னர் சிவாஜிக்கே வசனம் எழுதி கொடுத்தவர் கலைஞர் என்பதை புரியும் வயது வந்தவுடன் அவருடைய தமிழுக்கு ரசிகனானேன்.

ரஜினி இந்த விழாவிற்கு வருகிறாரா என்று ஒரு கேள்வி கேட்டேன். ஆமாம் வருகிறார் என்றார் ஸ்டாலின். அவரும் பேசுகிறாரா என்றேன். இல்லை, மேடைக்கு கீழே அமர்ந்து பார்வையாளராக இருப்பதாக சொல்லிவிட்டார் என்றார். அப்படியானால் நானும் கீழேயே அமர்ந்துகொள்கிறேன் என்றேன். எதுவும் சொல்ல வந்தால் கையை பிடித்து இழுத்துக் கொள்வார் ரஜினி என்ற தைரியம் இருந்தது. விழாவுக்கு அழைத்துவிட்டு ஸ்டாலின் சென்ற பிறகு கண்ணாடியில் என்னை பார்த்துக்கொண்டேன். அடேய் முட்டாள் எவ்வளவு பெரிய வாய்ப்பை இழக்கிறாய். இந்த விழா எப்படிப்பட்டது என்பதை முதலில் புரிந்துகொள் என்றது. தற்காப்பு முக்கியம் அல்ல; தன்மானம்தான் முக்கியம். ஏன் அப்படி சொல்கிறேன் என்றால் இந்த மேடையில் அமர்ந்திருக்கும் ஒரு அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.

அந்த மேடையில் அமர்ந்து கழகத்தில் சேரப்போகிறீர்களா என்று டுவிட்டரில் என்னை கேள்வி கேட்கிறார்கள். சேருவதாக இருந்தால் 1983ல் கலைஞர் டெலகிராம் மூலம் அழைப்பு விடுத்தபோதே சேர்ந்திருப்பேன். கலைஞரின் பெருந்தன்மை என்னவென்றால் அதன்பிறகு இதுவரையிலும் அதுபற்றி கேட்கவில்லை. அந்த மரியாதை இந்த மேடையிலும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்திருக்கிறேன்.

விகடன் பா.சீனிவாசன் பேசும்போது பூனூல் பத்திரிகை என்று கலைஞர் விமர்சனம் செய்ததை சொன்னார். அவரே இந்த விழாவுக்கு மகிழ்வோடு வந்திருக்கும்போது பூனூலே இல்லாத கலைஞானி இந்த விழாவுக்கு வருவதில் என்ன ஆச்சரியம்? ஏன் இப்படி பதறுகிறீர்கள்? அரசியல் பற்று விமர்சனம் செய்வீர்களா என்றால் அதற்கு இதுவா மேடை. அந்த அறிவு எனக்காவது இருக்க வேண்டாமா?

திராவிடம் என்பது ஜனகன பாடலில் இருக்கும் வரை இருக்கும். திராவிடம் தென்னிந்தியாவில் மட்டும் உள்ளது என்று நினைக்க வேண்டாம்.திராவிடம் என்பது மொத்த இந்தியாவுக்கும் சொந்தமானது என்பதை மொத்த நாடும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

More News

நீண்ட இடைவெளிக்கு பின் முரசொலிக்கு கருணாநிதி எழுதிய கடிதம்

'முரசொலி' என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது கலைஞர் கருணாநிதி தனது தொண்டர்களுக்கு எழுதும் 'உடன்பிறப்பே' என்று ஆரம்பிக்கும் மடல் தான் அனைவருக்கும் ஞாபகம் வரும்...

அன்பா வந்தா ஒளி கொடுப்போம், வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்: 'மெர்சல்' பாடல் விமர்சனம்

பொதுவாக ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் என்றால் ஒருமுறைக்கு நான்கு முறை கேட்ட பின்னரே ஹிட்டாகும். ஆனால் முதல்முறை கேட்டபொழுதே புல்லரிக்கும் வகையில் ஒரு பாடல் நீண்ட இடைவெளிக்கு பின்னர் வெளியாகியுள்ளது என்றால் அது சற்று முன் வெளியாகியுள்ள 'ஆளப்போறான் தமிழன்' பாடல் தான்.

முரசொலி பவளவிழாவில் கலந்து கொண்ட கமல்-ரஜினி

சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்று வரும் முரசொலி பவளவிழாவில் உலக நாயகன் கமல்ஹாசன் வாழ்த்துரை வழங்கவுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது...

பருப்பு பாக்கெட்டில் கருப்பு எலி: ஆன்லைன் பர்ச்சேஸ் ஆபத்தானதா?

தற்போது ஆன்லைனில் அனைத்து பொருட்களையும் ஆர்டர் செய்வது வழக்கமான ஒன்றாகிவிட்டது.

அஜித்தின் கண்களில் ஒரு சிறுவனின் துள்ளல் தெரிந்தது. ஹாலிவுட் நடிகை ஆச்சரியம்

கோலிவுட்டில் பல திரைப்படங்கள் உலக தரத்தில் தயாரிக்கப்படுவதாக விளம்பரத்தினாலும் உண்மையாகவே உலக தரத்தில் உருவான படம் 'விவேகம்' என்பது அந்த படம் குறித்து வெளிவரும் தகவல்கள் உறுதி செய்கின்றன.