33 கோடி கொரோனா நிவாரண நிதி கொடுத்த சிஆர்பிஎஃப் வீரர்கள்
- IndiaGlitz, [Friday,March 27 2020]
நாடு முழுவதும் கொரோனா பயத்தில் தற்போது இருக்கும் நிலையில், கொரோனா வைரசில் இருந்து மக்களை காப்பாற்ற மத்திய அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது. கொரோனா வைரசால் இந்திய பொருளாதாரம் சரிந்து வரும் நிலையிலும் கொரோனா வைரசை ஒழிக்க ஆயிரக்கணக்கான கோடிகளை மத்திய அரசு ஒதுக்கி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பிரதமரின் பிரதமரின் நிவாரண நிதி திட்டத்தில் பலரும் தாராளமாக நிதி உதவி செய்து வருகின்றனர். இந்த நிலையில் நமது நாட்டை பாதுகாத்துவரும் சிஆர்பிஎஃப் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் இணைந்து 33 கோடியே 81 லட்சம் ரூபாயை பிரதமரின் நிவாரண நிதிக்கு நன்கொடையாக அளித்துள்ளனர். கொரோனாவிற்கு எதிராக போராடும் மத்திய அரசுக்கு இந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் செய்த இந்த உதவி பேருதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய மக்களை எதிரி நாடுகளிலிருந்து மட்டுமன்றி இயற்கைப் பேரிடர்களில் இருந்தும் காக்கும் சிஆர்பி வீரர்களின் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
ஏற்கனவே திரையுலக பிரபலங்கள் பலர் பிரதமரின் நிவாரண நிதிக்காக லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் பணத்தை வழங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில்கூட நடிகர் பிரபாஸ் பிரதமரின் நிவாரண நிதியாக ரூபாய் 3 கோடியும் தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநில முதல்வர் நிவாரண நிதியாக தலா 50 லட்சமும் என மொத்தம் 4 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.