நட்புக்காக அண்ணன்களாக மாறிய இராணுவ வீரர்கள்… திருமணத்தில் நெகிழ்ச்சி!

  • IndiaGlitz, [Thursday,December 16 2021]

உத்திரப்பிரதேசத்தில் நடைபெற்ற திருமணவிழா ஒன்றிற்கு எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த வீரர்கள் பலர் கூட்டமாக அதுவும் சீருடையில் கலந்து கொண்ட சம்பவம் புது உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் மணப்பெண்ணிற்கு அந்த வீரர்கள் அண்ணன் ஸ்தானத்தில் இருந்து சடங்குகளைச் செய்தது மேலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு காஷ்மீர் பகுதியில் நடைபெற்ற புல்வாமா தாக்குதலில் சிக்கி சைலேந்திர பிரதாப் சிங் எனும் எல்லைப் பாதுகாப்பு படை (சிஆர்பிஎஃப்) வீரர் உயிரிழந்தார். அவருடைய தங்கை ஜெயாவின் திருமணம் கடந்த 13 ஆம் தேதி உத்திரப்பிரதேசத்தில் நடைபெற்றது. இந்தத் திருமண விழாவிற்கு சைலேந்திர பிரதாப் சிங்குடன் பணியாற்றிய 110 ஆவது பட்டாலியன் வீரர்கள் அனைவரும் ஒன்றாக கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் தங்கை ஜெயாவிற்கு அண்ணனாக இருந்து சிஆர்பிஎஃப் வீரர்கள் அனைத்து சடங்குகளையும் செய்தது பார்ப்போரை நெகிழ வைத்துள்ளது. இதனால் அந்த திருமண விழாவிற்கு வந்த அனைத்து விருந்தினர்களும் எல்லைப்பாதுகாப்பு படை வீரர்களை நினைத்து உற்சாகத்தில் மிதந்ததோடு சைலேந்திர பிரதாப் சிங்கை நினைத்து பெருமை அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

More News

மாற்றுத்திறனாளிக்கு பரிவோடு உதவிய காவலர்… சல்யூட் வைக்கும் நெட்டிசன்ஸ்!

காவலர்கள் என்றாலே கண்டிப்புடன் பணியாற்றக் கூடியவர்கள் என்றுதான் நம்முடைய புரிதல் இருந்துவருகிறது. இந்நிலையில்

மாட்டுச்சாண டாஸ்க்கில் ஜெயித்து ஆட்டம் போடும் போட்டியாளர் யார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களுக்கு சில கடினமான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது என்பதையும் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் சளைக்காமல் விளையாடி வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே.

விஜய்யுடன் மீண்டும் இணைகிறதா 'பிகில்' கூட்டணி?

தளபதி விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மீண்டும் விஜய்யுடன் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

'விக்ரம்' படத்தில் விஜய்சேதுபதிக்கு 3 ஹீரோயின்களா? யார் யார்?

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் 'விக்ரம்' திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வரும் நிலையில் அவருக்கு ஜோடியாக மூன்று ஹீரோயின்கள் நடித்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

'ஓ மை கோஸ்ட்' படத்தில் சன்னிலியோன் கேரக்டர் இதுதான்: இயக்குனர் தகவல்!

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் 'ஓ மை கோஸ்ட்' என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக சமீபத்தில் சன்னி லியோன் சென்னை வந்து இருந்தார் என்பதையும் பார்த்தோம்