ஆத்திரத்தில் தண்ணீர் பாட்டில்களை எட்டி உதைத்த ரொனால்டோ… வைரலாகும் காட்சிகள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நட்சத்திர கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது அணி தோல்வியடைந்ததும் கோபத்தில் தண்ணீர் பாட்டில்களை எட்டி உதைத்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.
போர்ச்சுகல் அணி கேப்டனான கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது சவுதி அரேபியாவில் நடைபெற்று வரும் ப்ரோ லீக் கால்பந்து போட்டியில் கலந்துகொண்டு விளையாடி வருகிறார். 16 அணிகள் கொண்ட இந்தத் தொடரின் லீக் போட்டி நேற்று அல்-இத்திஹாத் மற்றும் அல்-நாசர் அணிக்கு இடையே நடைபெற்றது. இதில் அல்-நாசர் அணியில் இடம்பெற்று விளையாடிவரும் ரொனால்டோவின் அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது.
நேற்றைய போட்டியில் 79 நிமிடங்கள் வரை இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை. ஆனால் 80 ஆவது நிமிடத்தில் அல்-இத்திஹாத் அணியைச் சேர்ந்த வீரர் ரோமரினோ இலாவகமாக ஒரு கோலை அடித்து அணியை முன்னுக்கு கொண்டுவந்தார். இந்நிலையில் அல்-நாசர் அணிக்கு கிடைத்த கூடுதல் நேரத்தைப் பயன்படுத்தி ரொனால்டோ கோல் அடிக்க முயற்சி செய்தார். ஆனால் அல்-இத்திஹாத் அணியின் கோல் கீப்பரான மார்செலோ அவரது முயற்சியைத் தடுத்து நிறுத்தினார். இதனால் அல்-நாசர் அணி 0-1 என்ற கணக்கில் பின்னுக்குத் தள்ளப்பட்டது. அல்-இத்திஹாத் அணி புள்ளிப்பட்டியலில் முன்னேறியது.
இந்நிலையில் மைதானத்தை விட்டு வெளியேறிய கிறிஸ்டியானோ ரொனால்டோ அங்கு வைக்கப்பட்டு இருந்த தண்ணீர் பாட்டில்களைத் தனது காலால் எட்டி உதைத்தார். இந்தக் காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
இந்தப் போட்டி குறித்து டிவிட்டரில் கருத்துப் பதிவிட்ட ரொனால்டோ “முடிவு ஏமாற்றம். ஆனால் நாங்கள் எங்கள் சீசன் மற்றும் வரவிருக்கும் விளையாட்டுகளில் கவனம் செலுத்துவோம். உங்கள் ஆதரவிற்கும் அல்-நாசர் ரசிகர்களுக்கு நன்றி. நாங்கள் உங்களது நம்பிக்கையை நினைவுகூர்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.
Al-Ittihad fans chanting Messi Messi music to Ronaldo.
— Semper Fí 🥇 (@SemperFiMessi) March 9, 2023
Watch Ronaldo's kick at the 🔚 👽 pic.twitter.com/tvaz86PaBT
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com