பெண் ஊழியருக்காகத் துடித்துப்போன ரொனால்டோ… நெகிழ்ச்சி வீடியோ வைரல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கால்பந்து உலகின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு பெண் பணியாளருக்காகச் செய்த நெகிழ்ச்சி செயல் தற்போது ரசிகர்களிடையே பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் ரொனால்டோவை அவரது ரசிகர்கள் இன்னும் ஒருபடி மேலேபோய் தூக்கிக் கொண்டாடி வருகின்றனர்.
கால்பந்து உலகில் இந்தாண்டு பெரிய பெரிய மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் மெஸ்ஸி தான் சிறுவயது முதல் விளையாடிவந்த பார்சிலோனா கிளப் அணியை விட்டு வெளியேறினார். இன்னொரு பக்கம் ரொனால்டோ சத்தமே இல்லாமல் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் மீண்டும் இணைந்துள்ளார். இதனால் கால்பந்து ரசிகர்கள் படு குஷியில் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் ஸ்விட்சர்லாந்தில் நடைபெறவுள்ள சாம்பியன் லீக் போட்டியில் விளையாடுவதற்காக அனைத்து கால்பந்து அணிகளும் தற்போது தயாராகி வருகின்றன. அந்த வகையில் ரொனால்டோவின் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கும் பிஎஸ்சி யங் பாய்ஸ் அணிக்கும் இடையே பயிற்சி ஆட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இந்தப் பயிற்சி ஆட்டம் பயிற்சியைப் போல அல்லாமல் மிகவும் பரபரப்பாக நடைபெற்றது.
இதில் விளையாடிய பிஎஸ்சி யங் பாய்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ரொனால்டோ அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டிக்கிடையே நடைபெற்ற ஒரு சம்பவம் தற்போது சோஷியல் மீடியாவில் கடும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. அதாவது ரொனால்டோ கோல் போஸ்டை நோக்கி வேகமாக பந்தை நகர்த்துகிறார். அந்தப் பந்து தவறுதலாக கிரவுண்டை விட்டு வெளியேறி அங்கு பணியாற்றிவந்த ஒரு பெண் ஊழியரின் தலையில் பட்டுவிடுகிறது.
இதனால் அந்த பெண் ஊழியர் மயங்கி கீழே விழுகிறார். இதையடுத்து மருத்துவக்குழு அந்த பெண் ஊழியருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கின்றனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் ரொனால்டோ பெண் ஊழியரைப் பார்ப்பதற்காக களத்தைவிட்டு வெளியேறி மருத்துவக் குழுவை அணுகுகிறார். அவர்களிடம் பெண் ஊழியரின் உடல்நிலை குறித்து விசாரிக்கிறார். கூடவே தலையில் அடிப்பட்ட பெண் ஊழியருக்கு தைரியம் சொல்லியதோடு தன்னுடைய ஜெர்சியை பரிசளிப்பதாக உத்திரவாதம் கொடுக்கிறார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு தலையில் அடிபட்ட பெண் ஊழியருக்கு ரொனால்டோவின் ஜெர்சி பரிசாக வழங்கப்பட்டது. இதனால் மனம் குளிர்ந்துபோன பெண் ஊழியர் ரொனால்டோ வழங்கிய ஜெர்சியோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்தப் புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதில் ரொனால்டோ அடிப்பட்ட பெண்ணுக்காக துடித்துப்போன சம்பவம் தற்போது வீடியோ வடிவில் வைரலாகி வருகிறது.
Cristiano Ronaldo knocked out a steward with his shot in training before the match.
— DAZN Canada (@DAZN_CA) September 14, 2021
He jumped the barrier to check up on him while he received medical attention ❤️pic.twitter.com/YOBkqs3fEV
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments