ரொனால்டோவுக்கு கிடைத்த சிறப்பு விருது… உற்சாகத்தில் பொங்கும் ரசிகர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சர்வதேச கால்பந்தில் அதிக கோல்களை அடித்தவர் என்ற சாதனைக்காக போர்ச்சுக்கல் கால்பந்து கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு FIFA ஸ்பெஷல் தி பெஸ்ட் விருது வழங்கி கவுரவித்துள்ளது.
கால்பந்து வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான FIFA விருதுவழங்கும் விழா நேற்று நடைபெற்று முடிந்தது. இந்த விழாவில் கடந்த 2021 ஆம் ஆண்டு சிறப்பாகச் செயல்பட்ட வீரராக போலந்து கேப்டன் ராபர்ட் லெவண்டோஸ்கி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். பேயர்ன் மூனிச் கிளப் அணிக்காக விளையாடிவரும் இவர் 2020-2021 புண்டஸ்லிகா சீசனில் தனது அணிக்காக 41 கோல்களை அடித்து சாதனை படைத்திருக்கிறார்.
மேலும் இவர் முன்னணி வீரர்களான லியோனல் மெஸ்ஸி மற்றும் முகமது சலாவை பின்னுக்குத் தள்ளி இந்த விருதைத் தட்டிச்சென்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2020 யிலும் ஆண்கள் பிரிவில் ராபர்ட் லெவண்டோஸ்கியே பெஸ்ட் பிளேயர் ஆஃப் FIFA விருதைப் பெற்றிருந்தார். தற்போது லியோனல் மெஸ்ஸி மற்றும் முகமது சலாவை பின்னுக்குத் தள்ளி பெஸ்ட் பிளேயர் என்ற பட்டத்தைத் தட்டிப் பறித்துள்ளார்.
இதேபோல பெண்கள் பிரிவில் பார்சிலோனா வீராங்கனை அலெக்சியா புதேயாஸ் 2021 ஆம் ஆண்டிற்கான பெஸ்ட் பிளேயர் ஆஃப் FIFA விருதைப் பெற்றிருந்தார். பெண்கள் சாம்பியன்ஸ் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இவர் பார்சிலோனா அணியின் அசைக்க முடியாத நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வருகிறார். மேலும் கடந்த ஆண்டிற்கான பாலன் டி ஓர் விருதைப் பெற்றவரும் இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து சர்வதேச அளவில் அதிக கோல்களை அடித்திருந்த ஈரான் வீரர் அலி டேயினின் சாதனையை போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ முறியடித்துள்ளார். இதனால் FIFA அமைப்பு சிறப்பு விருது வழங்கி கவுரவித்துள்ளது. அதேபோல பெண்கள் பிரிவில் கனடாவின் கிறிஸ்டீயன் சின்க்ளேருக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout