குடும்பத்தோடு கடற்கரையில் காற்று வாங்கும் ரொனால்டோ… செம வைரல் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகின் தலைசிறந்த கால்பந்து வீரரும் போர்ச்சுகல் அணியின் கேப்டனுமான கிறிஸ்டியானோ ரொனால்டா தனது குடும்பத்தோடு கடற்கரையில் ஓய்வெடுக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு உள்ளார். இந்தப் புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
உலகின் அதிக ரசிகர்களை கொண்ட ரொனால்டோ விளையாடிவரும் போர்ச்சுக்கல் அணி தற்போது நடைபெற்று வரும் யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் கால் இறுதிச்சுற்றில் இருந்து வெளியேறியது. இதனால் ரொனால்டோ தற்போது தனது காதலி மற்றும் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ரொனால்டோ அவரது காதலி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ், ஜுனியர் ரொனால்டோ, கூடவே Mateo, Eva, Alana ஆகிய 5 பேரும் கடற்கரையில் அமர்ந்து காற்று வாங்கும் புகைப்படம் வெளியாகி இருக்கிறது.
சமீபத்தில் இன்ஸ்டாவில் அதிக சம்பளத்தைப் பெறும் உலகின் நெம்பர் ஒன் பிரபலம் ரெனால்டோ என்றும் அவருடைய ஒரு போஸ்ட்டுக்கு இந்திய மதிப்பில் 11.9 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு வரும் ரொனால்டொ “இது ஓய்வெடுக்கும் நேரம்“ எனப் பதிவிட்டு புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு உள்ளார். இந்தப் புகைப்படம் நெட்டிசன்களிடையே வரவேற்பை பெற்று இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments