கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் முடக்கப்படுகிறதா? போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை

  • IndiaGlitz, [Monday,July 20 2020]

கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் சமீபத்தில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்டதால் தமிழகம் முழுவதும் முருக பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து காவல்துறையினரிடம் அடுக்கடுக்காக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் செந்தில்வாசன் மற்றும் சுரேந்திரன் ஆகிய இரண்டு கருப்பர் கூட்டம் யூ-டியூப் நிர்வாகிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் 

மேலும் சர்ச்சைக்குரிய கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் வீடியோவும் நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அந்த யூடியூப் சேனலில் இருக்கும் மற்ற நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும் என்றும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். மேலும் அந்த யூடியூப் சேனலில் இன்னும் சர்ச்சைக்குரிய வீடியோக்கள் இருப்பதால் அந்த யூடியூப் சேனலை ஒட்டுமொத்தமாக தடை செய்ய வேண்டும் என காவல்துறையினர் அளிக்கப்பட்ட புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் சென்னை தி நகரில் உள்ள கருப்பர் கூட்டம் சேனல் அலுவலகத்தில் சமீபத்தில் சோதனை நடத்தி ஒரு சில ஆதாரங்களையும் சைபர் கிரைம் போலீசார் கைப்பற்றினர். இந்த ஆதாரத்தின் அடிப்படையில் இந்த யூடியூப் சேனலை தடை செய்ய யூடியூப் நிறுவனத்திற்கு போலீசார் தரப்பில் பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

More News

பீட்டர்பாலின் விவகாரத்தில் திடீரென நுழையும் இன்னொரு பெண்: தயாரிப்பாளர் ரவீந்தரின் திடுக்கிடும் தகவல்

வனிதா மற்றும் பீட்டர்பால் திருமணம் குறித்த சர்ச்சை கடந்த சில நாட்களாக ஊடகங்களில் வெளியாகிக் கொண்டிருக்கிறது என்பதும் வனிதாவின் திருமணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில்

பயந்துட்டியா குமாரு: வனிதாவை கிண்டல் செய்யும் கஸ்தூரி

வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தது குறித்து நடிகைகள் கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் உள்பட ஒரு சில நடிகைகள் தங்களுடைய கருத்தை டுவிட்டரில் தெரிவித்திருந்தார்கள்.

அருள்நிதியின் அடுத்த படத்தில் இணையும் வெற்றிமாறன்

'வம்சம்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் அருள்நிதி அந்த படத்தின் வெற்றியை அடுத்து 'மௌனகுரு' படத்தின் மூலம் அனைவராலும் நல்ல நடிகர் என்று அறியப்பட்டார்.

கன்னத்தில் அறைந்தது போல் இருந்தது: அமிதாப் குடும்பம் குறித்து லதா மங்கேஷ்கர்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக்பச்சன் ஆகிய இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை

கொரோனா ஒழிப்பில் இந்தியாவிற்கே வழிகாட்டியான சென்னை: தமிழக அரசின் சாதனை

சென்னையில் எடுக்கப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கையை பார்த்து இந்தியாவே ஆச்சரியம் அடைந்து உள்ளது என்பதும் இந்தியாவிற்கே சென்னை ஒரு வழிகாட்டியாக இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது