கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் முடக்கப்படுகிறதா? போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை
Send us your feedback to audioarticles@vaarta.com
கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் சமீபத்தில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்டதால் தமிழகம் முழுவதும் முருக பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து காவல்துறையினரிடம் அடுக்கடுக்காக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் செந்தில்வாசன் மற்றும் சுரேந்திரன் ஆகிய இரண்டு கருப்பர் கூட்டம் யூ-டியூப் நிர்வாகிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
மேலும் சர்ச்சைக்குரிய கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் வீடியோவும் நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அந்த யூடியூப் சேனலில் இருக்கும் மற்ற நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும் என்றும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். மேலும் அந்த யூடியூப் சேனலில் இன்னும் சர்ச்சைக்குரிய வீடியோக்கள் இருப்பதால் அந்த யூடியூப் சேனலை ஒட்டுமொத்தமாக தடை செய்ய வேண்டும் என காவல்துறையினர் அளிக்கப்பட்ட புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சென்னை தி நகரில் உள்ள கருப்பர் கூட்டம் சேனல் அலுவலகத்தில் சமீபத்தில் சோதனை நடத்தி ஒரு சில ஆதாரங்களையும் சைபர் கிரைம் போலீசார் கைப்பற்றினர். இந்த ஆதாரத்தின் அடிப்படையில் இந்த யூடியூப் சேனலை தடை செய்ய யூடியூப் நிறுவனத்திற்கு போலீசார் தரப்பில் பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments