காதல் கிரிக்கெட்: திருமணம் முடிந்ததும் மனைவிக்கு பவுலிங் போட்ட தமிழக கிரிக்கெட் வீரர்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சாளரும், கொல்கத்தா அணியின் முக்கிய வீரருமான வருண் சக்கரவர்த்தி தனது நீண்ட நாள் தோழியை நேற்று திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் இரு வீட்டார்களின் வாழ்த்துக்களுடன் சென்னையில் சிறப்பாக நடந்தது

இந்த நிலையில் திருமணம் முடிந்ததும் மனைவிக்கு வருண் சக்கரவர்த்தி பவுலிங் போட, அவர் போட்ட பந்தை அவரது மனைவி பேட்டிங் செய்யும் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி ஜெயம் ரவி, நயன்தாரா நடித்த ’தனிஒருவன்’ படத்தில் இடம்பெற்ற ’காதல் கிரிக்கெட்’என்ற பாடலும் இந்த வீடியோவின் பின்னணியில் ஒலித்தது என்பது குறிப்பிடத்தக்கது

வருண் சக்கரவர்த்தி தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்ததை அடுத்து அவருக்கு கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியில் முதலில் வருண் சக்கரவர்த்தி பெயர் இடம் பெற்று இருந்தது என்பதும், ஆனால் காயம் காரணமாக அவர் விலக நேரிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது