கொரோனாவால் கிரிக்கெட் வீரர் பரிதாமாக உயிரிழப்பு...!
Send us your feedback to audioarticles@vaarta.com
ராஜஸ்தான் அணியின் ஸ்பின்னரான விவேக் யாதவ் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனாவின் இரண்டாம் கட்ட அலை இந்தியாவில் பெரும் தாக்கத்தையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் ஆட்டோவிலும், ஆம்புலன்சிலும் உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்தேறி வருகின்றன. திரையுலக பிரபலங்கள்,அரசியல்வாதிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உட்பட பல தரப்பினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
அண்மையில் ஐபிஎல் விளையாட்டு வீரர்கள் பலருக்கும் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இவர்களை தொடர்ந்து விருத்திமான் சாஹா, அமித் போன்றவர்களுக்கும் தொற்று இருப்பது உறுதியாக, ஐபிஎல் தொடர் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் அணிக்காக ரஞ்சிக்கோப்பை தொடரில் விளையாடியவர் தான் ஸ்பின்னர் விவேக் யாதவ் (36).
இவர் 18 முதல்தர போட்டிகளில் 57 விக்கெட்டுகளையும், 8 லிஸ்ட் ஏ போட்டிகளில் 9 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அண்மையில் இவருக்கு கொரோனா இருப்பது உறுதியானதை தொடர்ந்து, இன்று காலை விவேக் யாதவ் உயிரிழந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இந்தநிலையில் விவேக்கின் குடும்பத்துக்கு ஆகாஷ் சோப்ரா இரங்கல் தெரிவித்துள்ளார். இது பற்றி டுவிட்டரில் குறிப்பிட்டிருப்பதாவது “ராஜஸ்தான் ரஞ்சி வீரரும், என்னுடைய நண்பருமான விவேக் யாதவ் காலமானார். அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.
Rajasthan Ranji Player and a dear friend...Vivek Yadav is no more. May his soul R.I.P. Thoughts and prayers with the family ?? Om Shanti.
— Wear a Mask. Stay Safe, India (@cricketaakash) May 5, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments