மனைவிக்காக கடலில் குதித்த ரோஹித் சர்மா… நெகிழ்ச்சி சம்பவம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி பரிதாபமாக தோல்வியடைந்தது. இதையடுத்து கேப்டன் ரோஹித் சர்மா குறித்து கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வரும் நிலையில் அவரது மனைவி வெளியிட்டுள்ள இன்ஸ்டா ஸ்டோரி தற்போது ரசிகர்களிடையே சிறிது ஆசுவாசத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
உலகக் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியுற்றது. மேலும் கடந்த 10 ஆண்டுகளாக எந்த ஐசிசி கிரிக்கெட் போட்டிகளிலும் இந்தியக் கிரிக்கெட் அணி கோப்பைகளை வெல்லாமல் தற்போது இறுதிப்போட்டி வரை சென்று தோல்வியைத் தழுவி இருக்கிறது. இதனால் இந்திய அணி வீரர்கள் மீது கடும் விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தியக் கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா அணி தேர்வில் தவறிழைத்துவிட்டார் என்பதுபோன்ற விமர்சனங்களும் வைக்கப்பட்டு வருகின்றன. அடுத்து இந்தியக் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டிகளுக்காக ஜுலை 12 ஆம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர்.
இதற்கு முன்பு தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் இந்திய அணி படு தோல்வி அடைந்ததால் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது மேற்கு இந்திய அணிகளுக்கு எதிரான போட்டியில் என்ன நடக்கும்? ரோஹித் சர்மாவின் கேப்டன் பதவி தப்பிக்குமா? என்பது போன்ற பல்வேறு கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா இடம்பெறுவாரா என்பதுபோன்ற விவாதங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இப்படி கேப்டன் ரோஹித் சர்மா குறித்து பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்படும் வரும் நிலையில் அவர் தன்னுடைய குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
அந்த வகையில் தனது மனைவி ரித்திகா சஜ்தேவ் மற்றும் மகள் சமைராவுடன் கடலில் படகு சவாரி செய்தபோது ரித்திகா தனது செல்போனை கடலில் தவறவிட்டு இருக்கிறார். இதைப் பார்த்த ரோஹித் உடனே கடலில் குதித்து அந்த செல்போனை மீட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்துதான் தற்போது ரித்திகா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் நெகிழ்ச்சியுடன் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
தனது மனைவிக்காக ரோஹித் கொஞ்சமும் யோசிக்காமல் கடலில் குதித்த இந்தச் சம்பவம் தற்போது ரசிகர்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com