கிரிக்கெட் வீராங்கனை மிதாலிராஜ் வாழ்க்கை வரலாறு படம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மற்றும் முன்னணி வீராங்கனை மிதாலி ராஜ் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகள் செய்துள்ளார் என்பதும், 225 க்கும் அதிகமான ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்கள் குவித்த ஒரே பெண் கிரிக்கெட் வீராங்கனை என்பதும் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் மிதாலி ராஜ் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பதும், ‘சபாஷ் மித்து’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் மிதாலிராஜ் கேரக்டரில் நடிகை டாப்ஸி நடித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கத்தில், அமித் திரிவேதி இசையில், வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் இந்த ஆண்டு ஜூலி 15ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் தொடங்கவுள்ளன.
There is nothing more powerful than a girl with a dream and a plan to realise it!
— taapsee pannu (@taapsee) April 29, 2022
This is a story of one such girl who chased her dream with a bat in this “Gentleman’s Game” #ShabaashMithu The Unheard Story Of Women In Blue will be in cinemas on 15th July 2022. pic.twitter.com/fIJmVdppch
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments