கிரிக்கெட் வீராங்கனை மிதாலிராஜ் வாழ்க்கை வரலாறு படம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மற்றும் முன்னணி வீராங்கனை மிதாலி ராஜ் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகள் செய்துள்ளார் என்பதும், 225 க்கும் அதிகமான ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்கள் குவித்த ஒரே பெண் கிரிக்கெட் வீராங்கனை என்பதும் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் மிதாலி ராஜ் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பதும், ‘சபாஷ் மித்து’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் மிதாலிராஜ் கேரக்டரில் நடிகை டாப்ஸி நடித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கத்தில், அமித் திரிவேதி இசையில், வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் இந்த ஆண்டு ஜூலி 15ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் தொடங்கவுள்ளன.

More News

பிரபல நடிகைக்கு தென்னிந்திய திரையுலகமே சேர்ந்து நடத்தும் பாராட்டு விழா!

தமிழ் திரை உலகின் பிரபல நடிகையாக இருந்த ரோஜா சமீபத்தில் அமைச்சரான நிலையில் அவருக்கு தென்னிந்திய திரையுலகமே இணைந்து பாராட்டு விழா சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

'அது நடக்கவே நடக்காது': 'அஜித் 62' படம் குறித்து விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன் இயக்கிய 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்ற திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று திரையரங்களில் ஓடிவருகிறது.

'காத்துவாக்குல ரெண்டு காதல்' முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவான 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்ற திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

சிவகார்த்திகேயன் - பிரியங்கா அருள்மோகனின் பிரைவேட் பார்ட்டி: வீடியோ வைரல்

சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா அருள் மோகனின் பிரைவேட் பார்ட்டி குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது

சின்னத்திரை சித்ரா மரணத்திற்கு அரசியல்வாதி தான் காரணம்: கணவர் ஹேமந்த் திடுக் தகவல்

 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' உள்பட பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த சின்னத்திரை சித்ரா திடீரென கடந்த 2020ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மர்ம மரணம் குறித்து காவல்துறையினர்