பிரதமர் மோடியை நேரில் சந்தித்த சிஎஸ்கே வீரர்… காரணம் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
ஐபிஎல் போட்டிகளுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிவரும் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா தனது மனைவியுடன் பிரதமர் மோடியை நேரில் சந்தித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் சமூகவலைத் தளங்களில் வைரலான நிலையில் சந்திப்பிற்கான காரணங்கள் குறித்து ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் வீரரான ரவீந்திர ஜடேஜா ஐபிஎல் போட்டிகளுக்காக சென்னை சிஎஸ்கே அணியுடன் இணைந்து விளையாடி வருகிறார். நடப்பு ஐபிஎல் சீசனில் மட்டும் 13 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேபோல 9 போட்டிகளில் பேட்டிங் செய்த அவர் 133 ரன்களை எடுத்துள்ளார். இந்நிலையில் ரவீந்திர ஜடேஜா தனது மனைவியும் பாஜக எம்எல்ஏவுமான ரிவாபா-வுடன் பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது சமூகவலைத் தளப்பக்கத்தில் வெளியிட்ட அவர், உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சியாக இருந்தது. கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு நீங்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அனைவரையும் ஊக்குவிப்பீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
ரவீந்திர ஜடஜாவின் மனைவி ரிவாபா கடந்த ஆண்டு நடைபெற்ற குஜராத் தேர்தலில் பாஜக சார்பாக ஜாம்நகர் வடக்குச் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். இதன் தொடர்ச்சியாக இந்தச் சந்திப்பு நடைபெற்று இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் சிஎஸ்கே வீரர் ரவீந்திர ஜடேஜா பிரதமருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூகவலைத் தளங்களில் கவனம் பெற்று வருகிறது.
It was great meeting you @narendramodi saheb🙏
— Ravindrasinh jadeja (@imjadeja) May 16, 2023
You are a prime example of hardwork & dedication for our motherland!
I'm sure you will continue to inspire everyone in the best way possible 💪 pic.twitter.com/BGUOpUiXa0
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com