ஆர்ஜே பாலாஜியை திருப்பி கலாய்க்கலாமா? அஸ்வினின் வைரலாகும் வீடியோ

நடைபெற்று முடிந்த ஐபிஎல் சீசனில் ஆர்ஜே பாலாஜியின் தமில் கமெண்டரிக்கு பாராட்டுக்கள் குவிந்தது என்பது தெரிந்ததே. கிரிக்கெட்டை மட்டுமே பேசிக் கொண்டிருக்காமல் சினிமா உள்பட பல விஷயங்களை காமெடியோடு கலந்து கிரிக்கெட் வர்ணனை செய்த அவரது பாணி அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் இருந்தது

குறிப்பாக கிரிக்கெட் மைதான களத்தில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவர்களை கலாய்த்தது ரசிக்கும் வகையில் இருந்தது. இந்த நிலையில் பஞ்சாப் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான தமிழக வீரர் அஸ்வின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஆர்ஜே பாலாஜி என்னை உள்பட பலரையும் கலாய்த்த நிலையில் அவரை திருப்பி கலாய்ப்போமா? என்று கேட்டுள்ளார்.

இந்த வீடியோவில் அவர் கூறியதாவது: ஆர்ஜே பாலாஜியின் ’மூக்குத்தி அம்மன்’ தீபாவளியன்று வெளியாக உள்ளது. அந்த படத்தை பார்த்து நாம் அவரை திருப்பி கலாய்ப்பதா? அல்லது பாராட்டுவதா என்பதை முடிவு செய்யவேண்டும். இந்த படத்தில் நயன்தாரா நடித்து உள்ளதால் இது ஒரு ஸ்பெஷல் படமாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன். கடந்த சில மாதங்களாக எந்த திரைப்படம் வெளியாகவில்லை. தீபாவளிக்கு வெளியாகும் இந்த திரைப்படம் அனைவருக்கும் பிடித்த படமாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்’ என்று அஸ்வின் கூறியுள்ளார். அஸ்வினின் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது