உலக சாதனை செய்த கிரிக்கெட் வீரருக்கு அமைச்சரால் நேர்ந்த அவலம்
Send us your feedback to audioarticles@vaarta.com
மகாராஷ்டிராவை சேர்ந்த பிரனவ் தனவேத் என்ற கிரிக்கெட் வீரர், பள்ளி அளவிலான நடந்த போட்டி ஒன்றில் 1009 ரன்கள் அடித்து உலக சாதனை செய்தவர். இவர் சமீபத்தில் தான் படித்த பள்ளி மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது போலீஸாரால் தாக்கப்பட்டதாக வந்துள்ள செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் பிரனவ் பள்ளி மைதானத்தில் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த போலீஸார், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அந்த பள்ளியில் நடைபெறவுள்ள விழா ஒன்றில் கலந்து கொள்ள ஹெலிகாப்டரில் வரவுள்ளதாகவும், இதன் காரணமாக அந்த மைதானத்தில் ஹெலிபேடு அமைக்கவுள்ளதாகவும், அதனால் கிரிக்கெட் மைதானத்தை விட்டு அனைவரும் வெளியேற வேண்டும் என்றும் கூறினர்.
ஆனால் கிரிக்கெட் விளையாடும் மைதானத்தில் ஹெலிபேடு அமைக்க பிரனவ் உள்பட மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பிரனவை போலீஸார் தாக்கியது மட்டுமின்றி அவரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றதாகவும் அவர் மீதும் அவர் தந்தை மீதும் தவறான வழக்கு போட போலீஸார் முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இதுகுறித்து கேள்விப்பட்ட அமைச்சர் உடனே தனது ஹெலிகாப்டர் பயணத்தை ரத்து செய்துவிட்டு சாலை வழி பயணத்தை தொடர்ந்தார். மாணவர்கள் விளையாடும் மைதானத்தில் ஹெலிபேடு அமைப்பது தவறு என்றும், இதனால் தான் ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்த்து சாலை வழியே செல்வதாகவும் பேட்டி ஒன்றில் அமைச்சர் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com