ஐசிசி கிரிக்கெட் போட்டிகளில் சொதப்பிய இந்தியா… 10 வருட வரலாற்றை கிளறும் நெட்டிசன்ஸ்
- IndiaGlitz, [Monday,June 12 2023] Sports News
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி இரண்டாவது முறையாக இறுதிப் போட்டியில் விளையாடி படுதோல்வி அடைந்திருக்கிறது. இந்தப்போட்டியைத் தவிர கடந்த 10 வருடங்களாக இந்திய கிரிக்கெட் அணி சிவப்பு நிற பந்து விளையாட்டில் 9 முறை தோல்வியைத் தழுவி இருக்கும் வரலாற்று தோல்விகளை நெட்டிசன்கள் கிளறி எடுத்து விமர்சித்து வருகின்றனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்த இறுதிப்போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸிலேயே தனது வெற்றியை நிலைநிறுத்திவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் முதல் இன்னிங்ஸில் ட்ராவிஸ் டெட் – ஸ்மித் ஜோடி 250 விளாசியதால் 469 ரன்களை ஆஸ்திரேலியா குவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 296 ரன்களை எடுத்ததைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தனர். இதனால் இந்திய அணிக்கு 444 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 10 விக்கெட் இழப்பிற்கு வெறும் 234 ரன்களை மட்டுமே இந்திய வீரர்கள் அடித்த நிலையில் 209 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்ற அணி என்ற பட்டத்தைத் தட்டிச் சென்றுள்ளது. ஆனால் கடந்த 10 வருடங்களாக இந்தியக் கிரிக்கெட் அணை எந்த ஐசிசி போட்டிகளிலும் வெற்றிப்பெறவில்லை. இதனால் நெட்டிசன்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் என்று பலரும் இந்தியக் கிரிக்கெட் அணியை மோசமாக விமர்சித்து வருகின்றர். அதைத் தொடர்ந்து தோல்வி வரலாற்றையும் சோஷியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றனர்.
2014 – டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடிய இந்திய அணி, இலங்கை அணியிடம் தோல்வி அடைந்தது.
2015 உலகக்கோப்பை அரையிறுதில் விளையாடிய இந்திய அணி ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியுற்றது.
2016 – டி20 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் விளையாடிய இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோல்வியடைந்தது.
2017 – சாம்பியன்ஷிப் டிராபி போட்டியில் விளையாடிய இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்வியுற்றது.
2019 – உலகக்கோப்பையில் விளையாடிய இநதிய அணி, நியூசிலாந்து அணியிடம் தோல்வியுற்றது.
2012 – உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடிய இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்தது.
2021 – டி20 உலகக்கோப்பையில் விளையாடிய இந்திய குரூப் சுற்றிலேயே தோல்வியுற்றது.
2022- டி20 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் விளையாடிய இந்திய அணி இங்கிலாந்து அணியிடம் தோல்வியுற்றது.
2023 – உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடிய இநதிய அணி, ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்திருக்கிறது.
அதிலும் தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிவரை சென்று இந்திய அணி 2 முறை தோல்வியடைந்திருக்கிறது.
இந்நிலையில் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கான காரணங்கள் குறித்துப் பலரும் அலசி வரகின்றனர். அதில் ஒன்று வெள்ளை நிறக் கிரிக்கெட்டான ஐபிஎல போட்டிகளில் விளையாடிய இந்திய கிரிக்கெட் வீரர்கள் போட்டிக்களத்திற்கு தாமதாகச் சென்றது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு குறைந்தது 1 மாதத்திற்கு முன்பே வீரர்கள் சென்றிருக்க வேண்டும், குறைந்தது ஒரு பயிற்சி போட்டியிலாவது விளையாடி இருக்க வேண்டும் என்று கிரிக்கெட் பிரபலங்களே கருத்துக் கூறி வருகின்றனர்.
அடுத்து இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோகித் சர்மா ஆடுகளத்தை தவறாகக் கணித்து விட்டார். அதிலும் அவர் ரவிச்சந்திரன் அஸ்வினை எடுக்காமல் விட்டது பெரிய தவறு என்று கருத்துக் கூறிவருகின்றனர். காரணம் ஆஸ்திரேலிய அணியில் 5 இடதுகை பேட்ஸ்மேன்கள் இருக்கும் நிலையில் இந்திய அணியில் சூழற்பந்து வீச்சாளரான அஸ்வின் இருந்திருக்க வேண்டும். அஸ்வின் இடம்பெறாததற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை என்று சச்சின் முதற்கொண்டு பல பிரபலங்கள் கருத்துக் கூறி வருகின்றனர்.
அடுத்து வெள்ளை நிற பந்தில் அதிரடி காட்டிய வீரர்கள் பயிற்சி இல்லாமல் திடீரென்று டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாமல் திணறினர் என்றும் அதிரடி காட்டாமல் இருந்திருக்க வேண்டும் என்றும் விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது.