இந்தியா கிரிக்கெட் அணி டி20 உலகக்கோப்பை அரைஇறுதிக்குள் நுழையுமா?

டி20 உலகக்கோப்பை போட்டிக்கான லீக் ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணியுடன் எந்தவித போராட்டமும் இல்லாமல் எளிதாகத் தோற்றுப்போனது. இதற்கான காரணத்தைக் குறித்து பலரும விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியக் கிரிக்கெட் அணி அரை இறுதிப்போட்டிக்குள் நுழைய வாய்ப்பிருக்கிறதா? என ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் “பி“ டீமில் இருக்கும் பாகிஸ்தான் ஏற்கனவே அரை இறுதிக்கு தகுதிப்பெற்றுவிட்டது.

இதனால் அடுத்து நியூசிலாந்து அணியின் நிலவத்தை பார்க்க வேண்டும். இந்த அணி ஏற்கனவே பாகிஸ்தானிடம் தோற்றுப்போனாலும் இந்தியாவை வென்றுள்ளது. அடுத்து நமீபியா, ஸ்காட்லாந்து, ஆப்கானிஸ்தானுடன் நடைபெறும் போட்டியில் வெற்றிப்பெற்றே ஆக வேண்டும். இந்த அணிகளில் ஆப்கானிஸ்தான் மட்டுமே வலிமையான அணி. எனவே ஆப்கானிஸ்தான் அணியை வெற்றிப்பெற்றே ஆக வேண்டும்.

ஒருவேளை நியூசிலாந்து தோற்றுப்போனால் இந்தியாவிற்கு வாய்ப்பு கிடைக்குமா? என ரசிகர்கள் ஆர்வத்தோடு கேள்வி எழுப்பலாம். இதிலும் சிக்கல் இருக்கிறது. காரணம் நியூசிலாந்து +3.097 ரன் ரேட்டிங்கை வைத்திருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை -1.609 ரன் ரேட்டிங்கை வைத்துள்ளோம். எனவே நியூசிலாந்து முந்திக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

இதையடுத்து ரசிகர்கள் இன்னொரு கற்பனையான விஷயத்தையும் பார்க்க துவங்கி விட்டனர். அதாவது நமீபியா அல்லது ஸ்காட்லாந்து அணிகளுடன் மோதும்போது நியூசிலாந்து ஏதாவது ஒரு அணியிடம் தோற்றுப்போய்விட்டால் மீண்டும் இந்தியாவிற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் இல்லையா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். இப்படியும் நடக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் ஏற்கனவே ரன் ரேட்டிங்கை உயர்த்தி வைத்திருக்கிற நியூசிலாந்திடம் இதெல்லாம் பலிக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் இந்தியா அடுத்து நடைபெறவுள்ள போட்டிகளில் ஆப்கானிஸ்தான், நமீபியா, ஸ்காட்லாந்து அணிகளை வெற்றிக்கொள்ள வேண்டும். அதுவும் நல்ல மார்ஜினில் வெற்றிப்பெற வேண்டும். இப்படி வெற்றிப்பெற்ற பிறகு நியூசிலாந்து அணி நமீபியா அல்லது ஸ்காட்லாந்து அணியிடம் தோற்றுப்போனால் மட்டுமே ஒரு மேஜிக் நடக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் இது பெரும்பாலும் கற்பனையில் முடிவதற்கு அதிக சாத்தியம் என்பதையும் மூத்த வீரர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

இந்தியா அணி நாளை (3.11.2021) – ஆப்கானிஸ்தான் அணியுடன் மோதுகிறது. வரும் 5 ஆம் தேதி ஸ்காட்லாந்து அடுத்து 8 ஆம் தேதி நமீபியா அணியுடன் மோதவுள்ளது. அதேபோல நியூசிலாந்து நாளை ஸ்காட்லாந்து அணியுடன் மோதவுள்ளது. அடுத்து வரும் 5 ஆம் தேதி நமீபியா, வரும் 7 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணியுடன் விளையாட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

More News

'தேவர் மகன்' வசனத்தை கமல்ஹாசனுக்கு நன்றியாக கூறிய சூர்யா!

சூர்யாவின் 'ஜெய்பீம்' படத்தை பார்த்து கமல்ஹாசன் இன்று பாராட்டு தெரிவித்த நிலையில் அவருக்கு அவருடைய வெற்றிப்படங்களில் ஒன்றான தேவர்மகன் படத்தின் வசனத்தை கூறி சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

10 ஆண்டு காதலரை பிரேக் அப் செய்துவிட்டாரா பிரியா பவானிசங்கர்?

நடிகை பிரியா பவானி சங்கர், ராஜவேல் என்பவரை பத்தாண்டு காலமாக காதலித்து வந்த நிலையில் திடீரென அவரது இன்ஸ்டாகிராம் பதிவால் அவரது காதல் முடிவுக்கு வந்துவிட்டதா? என்ற சந்தேகத்தை ரசிகர்கள் கிளப்பி உள்ளனர்.

விருது பெற்றதும் நடிகர் விஜய்சேதுபதி செய்த காரியம்… குவியும் பாராட்டு!

“சூப்பர் டீலக்ஸ்“ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகர் விஜய்சேதுபதி, துணைநடிகருக்கான

ஜீன்ஸ் அணிந்ததற்காக இளம் பெண்ணுக்கு நடந்த அவலம்!

அசாம் மாநிலத்தில் பர்தா அணியாமல் ஜீன்ஸ் அணிந்துவந்த இளம் பெண்ணை கடைக்காரர்

'கோலமாவு கோகிலா', 'டாக்டர்' படம் போன்றதா 'பீஸ்ட்'?: நெல்சன் விளக்கம்!

இயக்குனர் நெல்சன் இயக்கிய 'கோலமாவு கோகிலா' மற்றும் 'டாக்டர்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் டார்க் காமெடி படங்கள் என்ற நிலையில் தற்போது அவர் இயக்கி வரும் 'பீஸ்ட்' படமும் அதே போன்ற ஒரு படமா