close
Choose your channels

'அரபிக்குத்து' பாடலுக்கு ஆட்டம் போட்ட பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவி! வீடியோ வைரல்

Monday, March 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்ற ’அரபிக்குத்து’ என்ற பாடல் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டானது மட்டுமின்றி யூடியூப்பில் இந்த பாடல் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் மிகப் பெரிய சாதனை செய்தது.

இந்த நிலையில் இந்த பாடலுக்கு கிட்டத்தட்ட அனைத்து திரை உலக பிரபலங்களும், சின்னத்திரை பிரபலங்களும் டான்ஸ் ஆடிய வீடியோ இணையதளங்களில் வைரலானது என்பதும் நேற்று கூட பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ஏற்கனவே பல கிரிக்கெட் பிரபலங்கள் இந்த பாடலுக்கு நடனமாடிய நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் யுஹேந்திர சாஹலின் மனைவி தனஸ்ரீ இந்த பாடலுக்கு தனது தோழிகளுடன் நடனமாடிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. யுஹேந்திர சாஹலின் மனைவி தனஸ்ரீ ஒரு டான்ஸ் மாஸ்டர் என்பதும், ஏற்கனவே அவரது யூடியூபில் பல நடன வீடியோக்களை அவர் பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment