தமிழ் சினிமாவில் இது ஒரு முக்கியமான படம்: கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி பாராட்டு..!

  • IndiaGlitz, [Wednesday,September 18 2024]

செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்று என கிரிக்கெட் வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள ’லப்பர் பந்து’ படத்தில், அட்டகத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ப்ரொமோஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் வெளியான டிரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் வருண் சக்கரவர்த்தி பாராட்டியுள்ளார். இந்த படத்தை பார்த்த பிறகு, அவர் கூறியது:

தமிழ் சினிமாவில் இது ஒரு முக்கியமான படமாக இருக்கும். கிரிக்கெட்டை மையமாக வைத்து அற்புதமாக எடுக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் விளையாடப்படும் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளது.

நானும் முதலில் ரப்பர் பந்து, டென்னிஸ் பந்தில் விளையாடி அதன்பிறகு உண்மையான கிரிக்கெட் பந்தில் விளையாடினேன். இதனால், என்னையும் படத்தின் கதையுடன் தொடர்புபடுத்தி பார்க்க முடிந்தது. இந்த படத்திற்கு என் முழு வாழ்த்துக்கள். தமிழ் சினிமாவில் இது முக்கிய படமாக இருக்கும் என்று தெரிவித்தார்

வருண் சக்கரவர்த்தியின் பாராட்டுகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்க செய்துள்ளது.

More News

லாரியை பல கிமீ துரத்தி பிடித்த பிரபல நடிகை: சினிமா பாணியில் ஒரு நிஜ சேஸிங்!

சினிமா பாணியில் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரியை பிரபல நடிகை ஒருவர் தனது காரில் துரத்திச் சென்று பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆசிரியர்ன்னா தப்ப திருத்துவறவன்: விமல் நடித்த 'சார்' டிரைலர்..!

விமல் நடித்த "சார்" என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து, தொழில்நுட்ப பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

விஜய் தவறான பாதையில் செல்கிறார்: பிரபல இயக்குனர்

நடிகர் விஜய் தவறான பாதையில் செல்வதாகவும் அதனால் வருத்தமாக இருப்பதாகவும் பிரபல இயக்குனர் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முத்தங்களை பரிமாறிய நயன் - விக்கி.. என்ன விசேஷம்? ரொமான்ஸ் புகைப்படங்கள்..!

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவரும் முத்தங்களை பரிமாறிய புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகிறது. இருவருக்கும் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதிவுக்கு லைக் போட்ட தனுஷ்.. மீண்டும் இணைகிறார்களா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் அவரது கணவர் தனுஷ் ஆகிய இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்ததாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட நிலையில்,