close
Choose your channels

தமிழ் சினிமாவில் இது ஒரு முக்கியமான படம்: கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி பாராட்டு..!

Wednesday, September 18, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்று என கிரிக்கெட் வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள ’லப்பர் பந்து’ படத்தில், அட்டகத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ப்ரொமோஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் வெளியான டிரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் வருண் சக்கரவர்த்தி பாராட்டியுள்ளார். இந்த படத்தை பார்த்த பிறகு, அவர் கூறியது:

"தமிழ் சினிமாவில் இது ஒரு முக்கியமான படமாக இருக்கும். கிரிக்கெட்டை மையமாக வைத்து அற்புதமாக எடுக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் விளையாடப்படும் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளது.

நானும் முதலில் ரப்பர் பந்து, டென்னிஸ் பந்தில் விளையாடி அதன்பிறகு உண்மையான கிரிக்கெட் பந்தில் விளையாடினேன். இதனால், என்னையும் படத்தின் கதையுடன் தொடர்புபடுத்தி பார்க்க முடிந்தது. இந்த படத்திற்கு என் முழு வாழ்த்துக்கள். தமிழ் சினிமாவில் இது முக்கிய படமாக இருக்கும் என்று தெரிவித்தார்

வருண் சக்கரவர்த்தியின் பாராட்டுகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்க செய்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment