'ஆதிபுருஷ்' படத்தை பங்கமாய் கலாய்த்த சேவாக்.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் வெளியான ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் வசூலில் சாதனை செய்தாலும் இந்த படம் நெட்டிசன் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளானது என்பதும் இந்த படத்தை பல திரையுலக பிரபலங்கள் கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்து அமைப்புகள் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. அது மட்டும் இன்றி ராமாயணம் தொலைக்காட்சி சீரியலில் ராமர் கேரக்டரில் நடித்த நடிகர் ‘ஆதிபுருஷ்’ போன்ற ஒரு மோசமான படத்தை நான் பார்த்ததில்லை என்று கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ஆதிபுருஷ்’ படத்தை பங்கமாக கலாய்த்து உள்ளார். அதில் அவர் ‘ஆதிபுருஷ்’ படத்தை பார்த்ததும் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என தெரியவந்தது என்று ட்விட் செய்துள்ளார். இந்த வீட்டிற்கு ஆயிரக்கணக்கான லைக் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.500 கோடி செலவு செய்து உருவாக்கப்பட்ட இந்த படத்தின் கிராபிக்ஸ் எப்படி இருக்க கூடாது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் என பல விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Adipurush dekhkar pata chala Katappa ne Bahubali ko kyun maara tha 😀
— Virender Sehwag (@virendersehwag) June 25, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments