அஜித் எனக்காக கார் கதவை திறந்து விட்டார்.. பிறந்த நாள் நிகழ்ச்சி பகிர்ந்து கொண்ட நடராஜன்..!

  • IndiaGlitz, [Wednesday,June 26 2024]

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் பிறந்தநாள் கொண்டாட்டத்தை கொண்டாடிய போது அதில் அஜித் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது. இந்த சந்திப்பு குறித்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி முடிந்தவுடன் நடராஜன் அந்த மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

சமீபத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 8 போட்டி நடந்த போது அதில் இந்தியா வெற்றி பெற்றது என்பது தெரிந்தது. இந்த நிலையில் இந்த போட்டியின் போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் கமெண்ட்ரி நிகழ்ச்சியில் நடராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற போது தனது பிறந்த நாளன்று அஜித்தை சந்தித்தது குறித்து நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பிசியோதெரபி தான் அஜித்துக்கும் பயிற்சி அளித்து வருகிறார் என்ற நிலையில் ஹைதராபாத் அணியுடன் இரவு உணவுகளை சாப்பிட சென்றபோதுதான் சர்ப்ரைஸ் ஆக அங்கு அஜித்தை சந்தித்தேன். அப்போது எனக்கு பிறந்தநாள் என்றவுடன் உடனே கேக் வெட்டி கொண்டாட்டம் நடந்தது.

அஜித்தை இதுவரை நான் நேரில் சந்திக்காத நிலையில் முதல் முறையாக சந்தித்த போது எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. மேலும் அஜித் ரொம்ப எளிமையானவர் என்பதற்கு ஒரே ஒரு உதாரணத்தைச் சொல்ல வேண்டும் என்றால், நாங்கள் எல்லோரும் சாப்பிட்டு விட்டு வெளியே வந்த போது என்னுடைய கார் உட்பட அனைவருக்கும் கார் கதவை திறந்து அவர்தான் வழி அனுப்பி வைத்தார், அந்த நிகழ்வை என்னால் மறக்க முடியாது’ என்றும் கூறினார்.

More News

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலிக்கு அழைப்பு விடுத்த ஆஸ்கர் விருது குழு.. பட்டியலில் வேறு யார் யார்?

இயக்குனர் எஸ்எஸ் எஸ்.எஸ்.ராஜமெளலி உட்பட சில இந்திய திரை உலக பிரபலங்களுக்கு ஆஸ்கர் விருது குழு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கீர்த்தி சுரேஷின் அடுத்த பட ரிலீஸ் தேதி.. அட்லி அறிவிப்பு.. செம்ம போஸ்டர் ரிலீஸ்..!

கீர்த்தி சுரேஷ் நடித்த 'ரகு தாத்தா' என்ற திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் நடித்துள்ள இன்னொரு படத்தின் ரிலீஸ்

வெங்கல்ராவ் வீடியோவை பார்த்து முதல் நபராக உதவி செய்த ஹீரோ.. எவ்வளவு கொடுத்தார் தெரியுமா?

நகைச்சுவை நடிகர் வெங்கல்ராவ் தான் உடல் நலம் இன்றி இருப்பதாகவும் தனக்கு சிகிச்சை செய்ய நிதி உதவி தேவைப்படுகிறது என்றும் உருக்கமாக வீடியோ வெளியிட்டு இருந்த நிலையில் முதல் நபராக

106 வயதில் பறந்து பறந்து சண்டை செய்ய முடியுமா? 'இந்தியன் தாத்தா' குறித்து ஷங்கர் கொடுத்த விளக்கம்..!

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'இந்தியன் 2' திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியான நிலையில் அந்த ட்ரெய்லரின் ஒரு காட்சியில் இந்தியன் தாத்தா பிறந்த வருடம் 1918

200 கிமீ வேகத்தில் பறக்கும் அஜித் கார்.. த்ரில் வீடியோ வைரல்..!

நடிகர் அஜீத் தற்போது அஜர்பைஜான் நாட்டில் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் நிலையில் படப்பிடிப்பு குறித்த வீடியோ சமீபத்தில் வெளியானது என்பதும் அதில் அந்தரத்தில் அஜித்