நடராஜன் கிரிக்கெட் மைதான திறப்பு விழா: பிரபல தமிழ் நடிகர் பங்கேற்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது சொந்த ஊரான சேலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டியில் கிரிக்கெட் மைதானத்தை அமைத்துள்ள நிலையில் இந்த மைதானத்தின் திறப்பு விழாவில் பிரபல தமிழ் நடிகர் ஒருவர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் உள்ள வீரரும், இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு சில போட்டிகளில் விளையாடியவருமான தமிழகத்தை சேர்ந்த நடராஜன் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் கடந்த சில மாதங்களாக கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
இந்த கிரிக்கெட் மைதானத்தின் பணிகள் முற்றிலும் முடிவடைந்து தற்போது திறப்பு விழா நடைபெறவுள்ளது. இந்த மைதானம் தனது கிராமத்தில் உள்ள கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளது என்பதை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் நடராஜன் தெரிவித்துள்ளார்.
இந்த மைதானத்தில் நான்கு பிட்சுகள், இரண்டு பயிற்சி தடங்கள், ஜிம்,கேண்டீன் மற்றும் 100 பார்வையாளர்கள் தங்கக்கூடிய மினி கேலரி ஆகியவை இடம்பெற்றுள்ளன. வரும் 23ஆம் தேதி நடைபெறும் இந்த மைதானத்தின் திறப்பு விழாவில் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார். மேலும் இந்த திறப்பு விழாவில் நடிகர் யோகி பாபு கலந்து கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் யோகி பாபு ஏற்கனவே கிரிக்கெட் ரசிகர் என்பதும் தோனியிடம் இருந்து சமீபத்தில் பேட் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Extremely delighted to announce the opening of my dream-come-true project- Natarajan Cricket Ground.
— Natarajan (@Natarajan_91) June 10, 2023
- 23rd of June, 2023
- Chinnappampatti, Salem District pic.twitter.com/Mj4yRswYuz
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments