சூப்பர் ஸ்டார், ஆனால் எளிமை.. மும்பையில் ரஜினியை சந்தித்த பிரபல கிரிக்கெட் வீரர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ’தலைவர் 170’ படத்தின் படப்பிடிப்பிற்காக மும்பை சென்ற நிலையில் மும்பை விமான நிலையத்தில் அவரை சந்தித்த பிரபல கிரிக்கெட் வீரர் ’சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எளிமை குறித்து தனவே சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ’தலைவர் 170’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரம், நெல்லை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் நடந்த நிலையில் அடுத்த கட்டமாக மும்பையில் நடைபெற உள்ளது. இந்த படப்பிடிப்பில் ரஜினியுடன் அமிதாப்பச்சன் கலந்து கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’தலைவர் 170’ படபிடிப்பிற்காக ரஜினிகாந்த் மும்பை சென்ற நிலையில் மும்பை விமான நிலையத்தில் அவரை பிரபல கிரிக்கெட் வீரராக இருந்த இர்ஃபான் பதான் சந்தித்தார். அவருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்த இர்ஃபான் பதான் இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் ஆக இருக்கும் ரஜினிகாந்த் அவர்கள் மிகவும் எளிமையான மனிதராக உள்ளார். அவருடனான சந்திப்பு எனக்கு பல படிப்பினையை தந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் கடந்த ஆண்டு வெளியான கோப்ரா’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது தெரிந்ததே.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout