'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர்: ஆச்சரிய தகவல்!

பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது டப்பிங் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பதும் இந்த படம் விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டு வருகிறது

இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் நடித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அவர்தான் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீசாந்த். ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் தான் நடித்திருப்பதாகவும் இந்த கேரக்டர் குறித்து இப்போதைக்கு என்னால் அதிகம் சொல்ல முடியாது என்றும் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த படத்தில் அவர் நடித்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

அதுமட்டுமின்றி மற்றுமொரு தமிழ் படத்திலும் சன்னி லியோனுடன் ஒரு ஹிந்திப் படத்திலும் கன்னட படம் ஒன்றிலும் நடிப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் சினிமாவிலும் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.