ஹர்திக் பாண்டே வெளியிட்ட குழந்தையின் புகைப்படம்: இணையதளங்களில் வைரல்

  • IndiaGlitz, [Thursday,July 30 2020]

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஹர்திக் பாண்டியாவுக்கும் நடாஷா என்ற நடிகைக்கும் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது. விரைவில் இவர்களது திருமணம் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் நடாஷா கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் ஹர்திக் பாண்ட்யா தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்தார். மேலும் தன்னுடைய புதிய குடும்ப உறுப்பினரை வரவேற்க தான் பெரும் எதிர்பார்ப்புடன் இருப்பதாகவும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன் கர்ப்பிணியான நடாஷா தனது மடியில் படுத்திருக்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார் என்பதும் இந்த புகைப்படம் இண்டர்நெட்டில் வைரலானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் ஹர்திக் பாண்டே தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். மேலும், குழந்தையின் கையை அவரது கை பிடித்திருப்பது போன்ற ஒரு புகைப்படத்தையும் ஹர்திக் பாண்டே பதிவு செய்துள்ளார்.

இதனையடுத்து சக கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

View this post on Instagram

We are blessed with our baby boy ❤️????

A post shared by Hardik Pandya (@hardikpandya93) on Jul 30, 2020 at 3:03am PDT

More News

புதிய கல்விக்கொள்கை: குஷ்புவை அடுத்து கமல் ஆதரவு

மத்திய அரசு நேற்று அறிவித்த புதிய கல்வி கொள்கைக்கு பெரும்பாலானோர் வரவேற்பும் ஒருசிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

சாதாரண சைக்கிளை வைத்து தண்டவாளத்தில் சாகசம்!!! ரயில்வே ஊழியருக்கு குவியும் பாராட்டு!!!

மிகப் பெரிய ரயில்வே போக்குவரத்துத் துறையைக் கொண்ட நாடு இந்தியா. பல்லாயிரக் கணக்கான பணியாளர்கள்

தமிழகம் வரை நீளுகிறதா கேரளத் தங்கக்கடத்தல் விவகாரம்!!! தீவிர விசாரணையில் என்.ஐ.ஏ!!!

கேரள அரசியலில் கடும் பரபரப்பை ஏற்படுத்திய தங்கக்கடத்தல் வழக்கை தற்போது தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் மிகத் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் அறிவிப்பில் என்னென்ன புதிய தளர்வுகள்?

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஜூலை 31-ஆம் தேதி வரை ஆறாம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் நாளையுடன் அந்த ஊரடங்கு முடிவடைகிறது.

9 மண்டலங்களில் கட்டுப்பாட்டு பகுதிகளே இல்லை: கொரோனாவை விரட்டி அடிக்கும் சென்னை

சென்னையில் கடந்த மாதம் வரை தினமும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சுமார் 1000 பேர் மட்டுமே கொரோனாவால் தினமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.