close
Choose your channels

கமல்ஹாசனின் 'இந்தியன் 2' படத்தில் இணைந்த கிரிக்கெட் வீரரின் தந்தை!

Tuesday, November 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன

’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் தற்போது லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்க முடிவு செய்திருப்பதால் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் தொடங்கியது.

இந்த படப்பிடிப்பில் கமல்ஹாசன் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டு வருகின்றனர் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு வெகுவிரைவில் முடியும் என்றும் அடுத்த ஆண்டு இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பிரபலமாக இருந்த யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ்சிங் என்பவர் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் இணைந்து உள்ளதாக தெரிகிறது. அவருக்கு மேக்கப் கலைஞர்கள் மேக்கப் போடும் புகைப்படம் வெளியாகியுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத்தி சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment