மனைவியுடன் ரொமான்ஸ் செய்யும் கிரிக்கெட் வீரர் .. அசத்தல் புகைப்படங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் பொல்லார்டு தனது மனைவியுடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
பிரபல மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரரும் ஐபிஎல் போட்டியில் விளையாடி வருபவரான பொல்லார்ட், அதிரடி ஆட்டம் ஆடுபவர் என்பதும், அவரது பேட்டிங் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருக்கும் என்பதும் தெரிந்ததே.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்ச் பெங்களூர் ஆகிய அணிகளில் இவர் விளையாடி உள்ளார் என்பதும் மிகப்பெரிய தொகைக்கு இவர் அந்த அணிகளால் ஏலம் எடுக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஜென்னா அலி என்பவரை காதலித்த பொல்லார்டு கடந்த 2012 ஆம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார், இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். மனைவி மற்றும் குழந்தைகள் மீது மிகவும் பாசமாக இருக்கும் பொல்லார்டு தனது இரண்டு தங்கைகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார் என்பது ஆச்சரியமான தகவல் ஆகும்.
கிரிக்கெட் பேட் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் ஜென்னா அலி, பொல்லார்டு விளையாடும் ஒவ்வொரு போட்டியையும் நேரில் பார்த்து அவரை உற்சாகப்படுத்துவார். இந்த நிலையில் பொல்லார்டு மற்றும் ஜென்னா அலி ரொமான்ஸ் மூடில் இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருவதை எடுத்து ரசிகர்கள் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments