தனுஷ் பட நடிகையுடன் பிரபல கிரிக்கெட் வீரர் டேட்டிங்? வைரல் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடித்த படத்தில் நாயகியாக நடித்த நடிகை ஒருவர் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவருடன் டேட்டிங் செய்திருப்பதாக புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தனுஷ் நடித்த ‘அட்ராங்கி ரே’ என்ற திரைப்படம் உள்பட பல பாலிவுட் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சாரா அலிகான். இவர் பிரபல பாலிவுட் நடிகர் சைப் அலி கான் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான சுப்மன் கில் மற்றும் சாரா அலிகான் ஆகிய இருவரும் ஹோட்டல் ஒன்றில் சாப்பிடும்போது இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
சுப்மன்கில், சாரா அலிகான் இருவரும் டேட்டிங் செய்வதாகவும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் #SaraAliKhan என்ற ஹேஷ்டேக்கில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் சுப்மன்கில், சாரா அலி கான் ஆகிய இரு தரப்பிலிருந்தும் தங்கள் காதலை வெளிப்படையாக இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே கிரிக்கெட் வீரர் விராத் கோலி உள்பட பல கிரிக்கெட் பிரபலங்கள் பாலிவுட் நடிகைகளை திருமணம் செய்துள்ளனர் என்பதும் அந்த வரிசையில் சுப்மன் கில் - சாரா அலி கான் ஜோடி தம்பதிகளாக மாறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Shubman gill date sara ali khan ko kar eha tha aur hum kisi aur hi sara ko lapet rhe the??#Shubmangill #CricketTwitter pic.twitter.com/oEAAXqXgOz
— Arun (@ArunTuThikHoGya) August 29, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments