இந்திய வீரர்களின் தொடரும் அதிரடி… முதல் நாள் போட்டியில் சில திருப்பங்கள்!

இங்கிலாந்துக்கு எதிரான 4 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இத்தொடர் போட்டியில் விக்கெட்டுகள் சரிகிறதே தவிர ரன் ரேட்டிங் ஏறின மாதிரியே தெரியவில்லை. இதனால் பெரும்பலான வீரர்கள் 200 தொடுவதே கடினம் எனும் நிலைமை இருந்து வருகிறது. இந்நிலையில் நமது ஹிட்மேன் ரோகித் சர்மா தற்போது முதல் இன்னிங்ஸில் 8 ரன்களை அடித்து தருணத்தில் தனது 300 ஆவது ரன்னை பதிவு செய்து இருக்கிறார். இதனால் இத்தொடர் போட்டியில் 300 என்ற எண்ணிக்கையைத் தொட்ட ஒரே வீரராக ரோகித் சர்மா மட்டுமே இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆடிய இங்கிலாந்து அணி வெறும் 205 ரன்களுக்கு சுருண்டது. இதில் பென் ஸ்டோக்ஸ் 55 ரன்களையும் டேன் லாரன்ஸ் 46 ரன்களையும் எடுத்து இருந்தனர். இவர்களுக்கு பந்து வீசிய முகமது சிராஜ் 45 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். அக்சர் படேல் 68 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளையும் அஸ்வின் 47 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர். இவர்களின் ஸ்பின் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் இங்கிலாந்து அணி திணறியதும் தற்போது விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறது.

இந்நிலையில் முதல் இன்னிங்ஸில் விளையாட துவங்கிய இந்திய அணியில் சுப்மன் கில் விக்கெட்டை இழந்து உள்ளார். இதனால் இந்திய அணி 24 ரன்களுக்கு 1 விக்கெட் எனும் நிலைமையில் இன்றைய போட்டி முடிவு பெற்று இருக்கிறது. இந்த 4 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றியோ அல்லது ட்ரா செய்து விட்டாலோ உலகக் கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இடம்பெற முடியும். ஏற்கனவே நியூசிலாந்து அணி இந்த வாய்ப்பை பெற்றுவிட்ட நிலையில் இந்திய அணி வீரர்கள் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அதிரடி காட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.