'தல' தோற்க வேண்டும் என கடவுளிடம் வேண்டினேன்: ரசிகரின் வித்தியாசமான வேண்டுதல்
Send us your feedback to audioarticles@vaarta.com
தல தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி முதல் பிளே ஆஃப் போட்டியில் மும்பையிடம் தோற்க வேண்டும் என கடவுளிடம் வேண்டியதாக தோனியின் தீவிர ரசிகரும் இளம் கிரிக்கெட் வீரருமான அவினாஷ் என்பவர் தெரிவித்துள்ளார்.
மும்பை-சிஎஸ்கே போட்டியில் சிஎஸ்கே தோல்வி அடைந்தால்தான் இரண்டாவது பிளே ஆஃப் போட்டியில் அந்த அணி விளையாடும் என்றும் தல தோனியின் அதிரடி ஆட்டத்தை விசாகப்பட்டினம் மைதானத்தில் பார்க்க வேண்டும் என்பதற்காகவே தான் கடவுளிடம், அந்த போட்டியில் மும்பையிடம் சிஎஸ்கே தோற்க வேண்டும் என வேண்டி கொண்டதாகவும் கூறியுள்ளார். தன்னுடைய ஆசை இன்று நிறைவேறுவதாகவும் தல தோனியின் அதிரடி ஆட்டத்தை பார்க்க ஆவலுடன் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
விசாகப்பட்டினம் மைதானம் ஏற்கனவே தோனிக்கு ராசியான மைதானம் ஆகும். இந்த மைதானத்தில் தான் பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த 2005ஆம் ஆண்டு நடந்த போட்டி ஒன்றில் 123 பந்துகளில் 148 ரன்கள் விளாசினார். அதேபோல் புனே அணிக்காக தோனி விளையாடியபோது மூன்று மிகப்பெரிய சிக்ஸர்களையும் ஒரு பவுண்டரியையும் விளாசி அந்த அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார். எனவே உலகின் மிகச்சிறந்த ஃபினிஷரான தோனி, இன்றும் வெற்றி பெறுவார் என்றே கருதுகிறோம்' என்று விசாகப்பட்டினத்தில் போட்டியை ரசிக்க காத்திருக்கும் ரசிகர்கள் தெரிவித்தனர். இன்னும் சற்று நேரத்தில் போட்டி தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com