டெங்கு கொசுக்களை ஒழிக்க செயற்கை கொசுக்கள் உருவாக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கலிபோர்னிய சான் டியாகோ பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தற்போது செயற்கையாக ஒரு புதிய வகை கொசுக்களை உருவாக்கியுள்ளனர். இந்தப் புதிய வகை கொசுவில் டெங்கு வராமல் தடுப்பதற்கான ஆண்டி பயாடிக் செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
முன்பு டெங்குவை பரப்பும் பூச்சிகளான ஏ ஈஜிப்டி (A.aegypti) கொசுக்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு இப்பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் சில முடிவுகளை வெளியிட்டனர். அதில் பெண் ஏ ஈஜிப்டி (A.aegypti) கொசுக்கள் நான்கு வகையான டெங்கு காய்ச்சல் ஏற்படுவதற்குக் காரணமாக இருப்பதை உறுதி செய்திருந்தனர்.
தற்போது இந்தப் பெண் ஏ ஈஜிப்டி (A.aegypti) கொசுக்களில் ‘கார்கோ‘ (CARGO) எனப்படும் ஆண்டி பயாடிக்கை செயற்கையாக ஏற்றி பரிசோதனையில் ஈடுபட்டனர். ஆண்டிபாயடிக் ஏற்றப்பட்ட கொசுக்கள் மனிதர்களுக்கு ஏற்படும் டெங்கு நோயினைக் கட்டுப் படுத்துகிறது எனத் தெரிய வந்துள்ளது.
இந்தப் பெண் கொசுக்கள் மனித உடலில் இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும்போது ஆண்டிபாயடிக் தானாக வெளிப்படும். ஆண்டிபாயடிக் செலுத்தப்பட்ட இந்த புதிய கொசுக்கள் மனித உடலில் கடிக்கும்போது ஆண்டிபாயடிக்கைக் கசிய விடுவதால் டெங்கு நோய் கட்டுப்பாட்டில் வைக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் புதிய ஏ ஈஜிப்டி (A.aegypti) கொசுக்களின் இனப் பெருக்கத்தையும் இது தடை செய்யும் என பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இத்தகைய வழிமுறைகள் நல்ல முன்னேற்றத்தை தரும் ஒரு புதிய கண்டுபிடிப்பு எனத் தற்போது அறிவியல் உலகம் நம்புகிறது.
கொசுக்களுக்கு ஆண்டிபாயடிக்கை செயற்கையாக கொடுக்கும் போது மனிதனின் மரபணுவில் நோய் எதிர்ப்பதற்கான சக்தியையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என டாக்டர் James Crowe தெரிவித்துள்ளார். Vanderbilt University Medical Center இன் இயக்குநர் டெனின் “வெப்ப மண்டல மற்றும் துணை வெப்ப மண்டல காடுகளில் இந்த டெங்கு கொசு மக்களை மிகவும் மோசமான நிலையில் பாதிக்கிறது. ஆசிய நாடுகளில் குழந்தைகளின் இறப்புக்கு இந்த டெங்கு கொசுக்கள் முக்கிய காரணமாக இருக்கின்றன. டெங்கு கொசு பாதிப்பினால் உண்டாகின்ற நோய்களுக்கு முழுமையான சிகிச்சைகள் கண்டுபிடிக்க வில்லை. எனவே இக்கொசுக்களை முழுவதுமாக ஒழிப்பது மட்டுமே தற்போது பயனளிக்கும்” எனத் தெரிவித்துள்ளார். டாக்டர் அக்பரி டெங்கு கொசுவின் ஆண்டிபாயடிக்குகள் மனிதனின் மரபணுவில் மாற்றங்களை உண்டாக்கி டெங்கு காய்ச்சலுக்கு எதிரான மரபணுவினை மனித உடல் உற்பத்தி செய்து கொள்ளும் திறனை வளர்த்து கொள்ள வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
உலகளவில் கொசுக்கள் 6.5 பில்லியன் மக்களுக்கு மலேரியா, டெங்கு போன்ற நோய்களை ஏற்படுத்தி இருக்கிறது. தொடர்ந்து இந்தக் கொசுக்களை ஒழிப்பதில் உலகம் முழுவதிலும் பல முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. கொசுக்களை முழுவதுமாக ஒழிப்பதற்கு முதலில் செய்ய வேண்டிய காரியம் கொசுக்களால் வரும் நோய்களைக் கட்டுப்படுத்துவதாகும். நோயைக் கட்டுப் படுத்தும் போது அதன் வீரியம் குறையும் என்று நம்ப படுகிறது
நன்றி – University of California – San Diego website
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments